Ads

Covid-19

Corona Virus and people

0 0 0 0 0 0
 • 419
 • 326
 • 305
 • 329
 • 287
 • 401
 • 319
 • 436
 • 335
Comments (0)
Author
 ·   · 13 albums
 •  · 11 friends
 •  · 11 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 6
 • 7
 • 6
 • 6
 • 8
 • 9
 • 10
 • 9
 • 7
 • 12
 • 9
 • 9
 • 17
 • 13
 • 15
 • 16
 • 14
 • 11
 • 14
 • 17
 • 17
 • 15
 • 16
 • 19
Added news 
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து நேற்று எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டு அந்த உண்டியலில் இருந்த அனைத்து ரூபாய் நோட்டு மற்றும் சில்லரை காசுகளும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.அங்கு கோவில் இணை ஆணையர் பொறுப்பு தனபால் தலைமையில் உதவி ஆணையர்கள் சிவலிங்கம், செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராமேசுவரம் கோவில் உண்டியல் வருமானமாக ஒரு கோடியே 16 ஆயிரம் ரூபாயும், மற்றும் தங்கம் 145 கிராம், வெள்ளி ஒரு கிலோ 931 கிராம் இருப்பதும் தெரியவந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பின் ராமேசுவரம் கோவில் திறந்து முதல் முறையாக தற்போதுதான் உண்டியல் வருமானம் மிக அதிகமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • 23
Added news 
ஷிவானி நாராயணன் தினமும் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியாக இருந்துவருகிறது. தற்போது இடுப்பு மற்ற அங்க அழகுகள் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த ஜவ்வு மிட்டாயை ஒரு தடவை கவ்வி எடுக்கணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
 • 22
Added news 
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பான் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அதிகரிப்பை தடுப்பதில் பிரதமர் யோஷிஹைட் சுகா கவனம் செலுத்த உள்ளார் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சமீபத்தில் ஜப்பானின் பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • 22
Added news 
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா.  சமீபத்தில் ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் மண்ணைக் கவ்வியது. அதற்கு இயக்குநரிடம் விஜய் தேவர் கொண்டா சண்டை போட்டதுதான் காரணம் எனவும் பல காரணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், தற்போது ஓரளவு அறியப்படும் நடிகையாக மாறிவிட்டதால் இனி அதுபோன்ற காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.இப்படி சொன்ன நம்ம ராசி கண்ணாவா இந்த அளவுக்கு இறக்கியுள்ளார் என யோசிக்கும் அளவுக்கு அவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் அமைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 • 22
Added news 
இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல முடிவுகளை அறிவித்துள்ளனர்.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.சிகிச்சை  நிலையங்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கோவிட் நோயாளிகளுக்கு தேவையான ஒக்ஸிஜனை வழங்குதல்வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்கோவிட் நோயாளிகளை நோய்த்தொற்றின் அளவின் அடிப்படையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஒரு அமைப்பை உருவாக்குதல்கோவிட் சிகிச்சைக்காக பகுதி மற்றும் மாவட்ட ரீதியில் மருத்துவமனைகளை அமைத்து அவற்றுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல்மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் மற்றும் சாதாரண நோயாளிகளுக்கு இணையான சிகிச்சையை உறுதி செய்தல்ஒரு நாளைக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைந்தது 15,000 ஆக உயர்த்தல்தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக அமுல்படுத்துதல் மற்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தல்வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மக்களுக்கு விசேட தனிமைப்படுத்தல் சட்டத்தை உருவாக்குதல்இவ்வாறான முடிவுகள் குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
 • 35
Added news 
ஆசியாவிற்கான போவோ மன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உரையாற்றியிருந்தார்.அவரது உரையில், ஆசியாவிற்கான இந்த ஆண்டின் போவோ மன்றத்தின் ஆரம்ப மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில், நாடுகளை ஒன்றிணைப்பதற்கு இரண்டு தசாப்த கால சிறப்பான பணிகளை நிறைவுசெய்திருக்கும் போவோ மன்றத்தை வாழ்த்த விரும்புகிறேன்.ஆசியாவிற்கான போவோ மன்றத்தில் சீன மக்கள் குடியரசு ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்கும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். பல நூற்றாண்டு கால வளமான வரலாற்றின் ஊடாக, இலங்கையும் சீனாவும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கைக்கு நலன் பயக்கும் பல முக்கிய துறைகளில், இலங்கைக்கு மேன்மைதங்கிய ஷி ஜின்பிங் அவர்களும் சீன அரசாங்கமும் அளித்த ஆதரவை நான் பாராட்டுகிறேன்.இலங்கை ஒரு தெளிவான மற்றும் துடிப்பான வெளியுறவுக் கொள்கையை பேணிவருகிறது, இது அனைத்து நட்பு நாடுகளுடனும், குறிப்பாக, அதன் ஆசிய அண்டை நாடுகளுடனும் சமமான மற்றும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் மேம்பட்ட ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறது. இந்த கோட்பாடுகள் எங்கள் ‘சுபீட்சத்தின் நோக்கு’ அபிவிருத்தி கொள்கை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.எனவே உலகளாவிய நிர்வாகத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளை நான் பாராட்டுகிறேன். சர்வதேச உறவுகளுக்கு மிகவும் சமமான மற்றும் கௌரவமான அடித்தளத்தை நோக்கி நாம் பாடுபடுவது அவசியமாகும்.தற்போதுள்ள உலகளாவிய கட்டமைப்புகள் மற்றும் ஆட்சிப் பொறிமுறைகள் எப்போதும் மாறிவரும் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன, இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், உலகப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை பொருட்படுத்தாமல், எண்ணற்ற விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஆளுகை கட்டமைப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்களுக்கு உலகளாவிய விதிகளை உருவாக்கும் செயல்முறையை அணுக முடியாதிருப்பதை நாங்கள் அறிவோம். இது ஒரு வருந்தத்தக்க சூழ்நிலை.எனது கருத்துக்களை நிறைவுக்குக் கொண்டு வரும் வகையில், போவோ மன்றத்தின் ஒரு ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இம்மன்றத்தின் வழிகாட்டும் கொள்கைகளுக்கும் அதன் நோக்கத்திற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை நான் உறுதிப்படுத்துகிறேன்.போவோ வருடாந்த மாநாடு 2021 இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கு இடையிலும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் உலகளவில் சவாலான இத்தருணத்தில் ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
 • 46
Added news 
 துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் ஆழமான விடயங்களைக் கொண்டிருப்பதாகவும் அது உலக ரீதியில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.துறைமுக நகருக்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையானது என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 • 49
Added news 
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 93 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 02 ஆயிரத்து 524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.
 • 46
Added news 
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பிரான்சில் 53 இலட்சத்து 39 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 43 ஆயிரத்து 98 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 375 பேர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, ஜேர்மனியில் 31 இலட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 16 ஆயிரத்து 363 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 312 பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் 38 இலட்சத்து 91 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 12 ஆயிரத்து 74 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 390 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • 47
Added news 
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கனடாவில் 11 இலட்சத்து 39 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 46 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 23 ஆயிரத்து 713 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • 48
Added news 
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்து 200 ரூபையாக அதிகரித்துள்ளது.மத்திய வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.90ரூபாயாகவும் கொள்விலை 195.10 ஆகவும் பதிவாகியுள்ளன.சமீபத்தில் இலங்கை சீனாவிடமிருந்து புதிய கடனை தொகையை பெற்றுக்கொண்ட நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.
 • 58
Added news 
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகளாகின்ற நிலையில் அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தினார்.இதன்போது அவர், இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் அதாவது 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட இருண்ட தினத்தின் ஈராண்டு நிறைவை மிகுந்த அனுதாபத்துடன் நினைவு கூருகின்றோம். அன்று உயிர்த்த ஞாயிறு தின வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் உள்ளிட்ட 259 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைத்து அன்புக்குரியவர்களையும் நினைவு கூருவதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன். அத்துடன் தாக்குதலின்போது காயமடைந்த மற்றும் ஊனமுற்ற நூற்றுக்கணக்கானோர் உடல், உள ரீதியாக பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்த, ஊனமுற்ற மற்றும் காயமடைந்த அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் பிற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ சட்டமா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக இவ்விடயத்தில் நாம் தலையீடு செய்யாவிடினும், அச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராகவிருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.அத்துடன் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக செயற்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு ஆகியவற்றின் விசாரணைகளை சுயாதீனமான முறையில் முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகளை ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவ்விசாரணைகளின் இறுதியில் அந்தந்த திணைக்களங்களின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம்.இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை இனி எப்போதும் ஏற்படாது தடுக்க ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.அத்துடன், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன்னிறுத்த நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார். 
 • 48
Added news 
நாளைய தினம் இடம்பெறவிருந்த அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 • 52
Added a post 
கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......(01) பாராத பயிரும் கெடும்.(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.(03) கேளாத கடனும் கெடும்.(04) கேட்கும்போது உறவு கெடும்.(05) தேடாத செல்வம் கெடும்.(06) தெகிட்டினால் விருந்து கெடும்.(07) ஓதாத கல்வி கெடும்.(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.(09) சேராத உறவும் கெடும்.(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.(11) நாடாத நட்பும் கெடும்.(12) நயமில்லா சொல்லும் கெடும்.(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.(15) பிரிவால் இன்பம் கெடும்.(16) பணத்தால் அமைதி கெடும்.(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.(18) சிந்திக்காத செயலும் கெடும்.(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.(20) சுயமில்லா வேலை கெடும்.(21) மோகித்தால் முறைமை கெடும்.(22) முறையற்ற உறவும் கெடும்.(23) அச்சத்தால் வீரம் கெடும்.(24) அறியாமையால் முடிவு கெடும்.(25) உழுவாத நிலமும் கெடும்.(26)உழைக்காத உடலும்  கெடும்.(27) இறைக்காத கிணறும் கெடும்.(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.(31) தோகையினால் துறவு கெடும்.(32) துணையில்லா வாழ்வு கெடும்.(33) ஓய்வில்லா முதுமை கெடும்.(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.(35) அளவில்லா ஆசை கெடும்.(36) அச்சப்படும் கோழை கெடும்.(37) இலக்கில்லா பயணம் கெடும்.(38) இச்சையினால் உள்ளம் கெடும்.(39) உண்மையில்லா காதல் கெடும்.(40) உணர்வில்லாத இனமும் கெடும்.(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.(43) தூண்டாத திரியும் கெடும்.(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.(45) காய்க்காத மரமும் கெடும்.(46) காடழிந்தால் மழையும் கெடும்.(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.(49) வசிக்காத வீடும் கெடும்.(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.(51) குளிக்காத மேனி கெடும்.(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.(53) பொய்யான அழகும் கெடும்.(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.(55) துடிப்பில்லா இளமை கெடும்.(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.(57) தூங்காத இரவு கெடும்.(58) தூங்கினால் பகலும் கெடும்.(59) கவனமில்லா செயலும் கெடும்.(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
 • 37
Added a post 
ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர் அவரை வரவழைத்தார். அபூர்வமான மந்திரம் ஒன்றை அனுமனுக்கு உபதேசித்தார். இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் எல்லாருக்கும் சொல்லி விடாதே பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால் இதை மனதிற்குள் உருவேற்று பக்குவம் இல்லாதவர்களுக்கு இதனை சொல்லாதே என்றார். மறு நாள் ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ராமர் திடுக்கிட்டார். காரணம் அங்கே ராமர் ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை பறை அறிவித்து வீதி வீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் அனுமன். ராமர் அனுமனை வரவழைத்து என்ன காரியம் செய்கிறாய் பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பறை அறிவித்து சொல்கிறாயே என்றார். அமைதியாக ராமரை நமஸ்கரித்து அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன் தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால் அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து தாங்களே விசாரிக்கலாம் என்றார் அனுமன். சிலரை வரவழைத்து அனுமன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? எனக் கேட்டார் ராமர்.ராமர் கேட்ட கேள்வி ஒன்றுதான் ஆனால் பதில்கள் பலவிதமாக வந்தன. புரியவில்லை என்று சிலர் கூறினார்கள். அனுமன் ஏதோ மனம்போன போக்கில் உளறிக் கொண்டு சென்றார் என்று சிலர் கூறினார்கள். இன்னும் சிலரோ அனுமன் பேசியது புரியாவிட்டாலும் நகைச்சுவையாக இருந்தது என்று சிலர் கூறினார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாக கூற பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும் அனுமன் உபதேசித்தது சாதாரண மந்திரமா பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே என்று சொல்லி மெய் சிலிர்த்தார்கள். மக்களின் பக்குவத்தை ராமர் புரிந்து கொண்டார்.விதை ஒன்று தான் நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட அவ்வப்போது நீர் உரம் இட்டு பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல குரு உபதேசிக்கும் மந்திரத்தை எல்லாரும் பெற்றுக் கொண்டாலும் அது பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.
 • 39
Added a post 
ராமர் ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன் அங்கதன் அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து அவற்றின் மீது ஜெய் ஸ்ரீராம் என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி ராமரை வணங்கி அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள் என்று வேண்டினார். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அது போல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால் அனுமனை பிடித்து பாருங்கள் என்றார் ராமர். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி அனுமனே நான் சனீஸ்வரன் இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க உன் உடலில் ஓர் இடம் கொடு என்றார்.சனீஸ்வரா ராவணனின் சிறையில் இருக்கும் சீதையை மீட்க நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபால பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும் நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம். அனுமனே காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல் உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம் என்று கேட்டான்.ராம வேலையில் என் கைகள் ஈடுபட்டுள்ளன. அதனால் அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால் அது உங்களுக்கு நான் தரும் அவமரியாதையாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று சனிஸ்வரரை தலை வணங்கி நின்றார் அனுமன். அவரின் தலை மீது அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன். இதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கி வந்த அனுமன் சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலை மீது வைத்துக்கொண்டு கடலை நோக்கி நடந்து பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்கு பதிலாக அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால் சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா என்று சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல் அவரது தலையில் இருந்து கீழே குதித்தார். சனீஸ்வரா ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன் உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால் நானும் பாறைகளை சுமந்து சேது பாலப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். சிவனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று வெற்றி பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன் என்றார் சனீஸ்வரன். அதற்கு அனுமன் இல்லை இல்லை இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் என்றார் அனுமன். அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன் அனுமனே உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள் என்றார். ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும் என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார். ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பத்தில் இருந்த நம்மை காத்துக் கொள்ளலாம்.
 • 40
Added a post 
ஸ்ரீராமா.....
 • 39
Added news 
கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் முதல் அலையில் ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 1 லட்சத்தை எட்டியிராத நிலையில், இந்த இரண்டாவது அலை, கடந்த சில நாட்களாக தினந்தோறும் 2 லட்சத்துக்கு அதிகமானவர்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து நேற்று இரவு 8.45 மணிக்கு டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய போரை நாடு மீண்டும் நடத்தி வருகிறது. சில வாரங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது 2-வது அலையானது, புயல்போல வந்து விட்டது. நீங்கள் அனைவரும் சந்தித்து வருகிற கஷ்டங்களை நான் அறிந்திருக்கிறேன். உங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.தொற்று நோய்க்காலத்தில் சேவையாற்றி வருகிற டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பாதுகாப்பு படையினர், போலீசார் என அனைவரும், மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தங்களது உயிர்களைப் பணயம் வைத்து சேவையாற்றுவதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மிக வேகமாக மருந்துகளை தயாரித்து அளிக்கிற வலுவான மருந்து துறையை இந்தியா பெற்றுள்ளது.அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஒழுங்குடன் பின்பற்ற வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடு அவசியம்.வதந்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. பொது முடக்கத்துக்கு எதிராக நாம் காத்துக்கொள்ள வேண்டும். இதை மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கடுமையான போராட்டத்தை நடத்தி உள்ளது. இதற்கான பெருமை உங்களைத்தான் (பொதுமக்களை) சேரும்.பொதுமக்களாகிய உங்களது பங்கேற்பு என்ற ஆயுதத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க முடியும். தேவைப்படுகிற நேரத்தில் உதவுகிற மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் கூறினார்.
 • 80
Added a post 
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி  மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது  பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.8. தீட்சதர்கள்,  மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.14. சிறப்பு - 3  அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.16. இவ்வாறு 6-5-8 என  அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்."புல்லாகி,  பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி,   பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய்,  கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.முதல் திருப்பதிகமான சிவபுராணத்தில் நமச்சிவாய வாழ்க! என ஆரம்பித்து அம்மை எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே! என முடித்திருப்பார் மணிவாசகப் பெருமான். சிவமும் சக்தியும்தான் திருவாசகம்.சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்திருச்சிற்றம்பலம்மாணிக்கவாசகர்
 • 85
வாழ்த்துகள்....
 • 72
Added a post 
விந்துவைக் கெட்டியாய் ஆக்கிவிடும் வெண்டைக்காய்,கூட்டி விடும்வெண்டைப் பிஞ்சு.அதிமதுரம் சேர்த்தால் பெருகும் புதுஉதிரம்,சர்வமும் சீராகும் ஆம்.கருத்தரிக்க வைக்கும் அணுக்கள் அதிகரிக்க,கத்தரியை உன்உணவில் கூட்டு.முருங்கை சுரைக்காய் விதைஆக்கும், ஆணின்விருப்பைப் பெருங்கவிதை யாய்.சருமத்தைக் காப்பதற்கும் ஆணின் விருப்பத்தைச்தீர்ப்பதற்கும் கோரைக் கிழங்கு.பூரித்து எழவைக்கும் , ஆண்பெண் குறைத்தீர்க்கும்ஓரிதழ் தாமரைச் சாறு.சாதிக்காய் உண்பவர் வீழாமல் சாதிப்பார்,தாழும் தளர்ச்சியை வென்றுஎச்சரிக்கை :விந்தளவு மங்கி, எலும்புஉருகும் விந்தையை,கூடிவிடும் உப்புஉருவாக் கும்.பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும் ,கெடுமாம் கருவோடு விந்து
 • 106
Added news 
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்துக்கு 400-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 • 81
அன்பான காலை வணக்கம்.....
 • 70
Added a recipe 
 • 80
Added news 
நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் பிரபலமானார் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. சில வெப்சீரியல்களில் நடித்து வருகிறார்.பட வாய்ப்புகள் இல்லாததால் Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார். தற்போது பேண்ட், ட்ரவுசர் என எதுவும் இல்லாமல் தன்னுடைய தொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய்பிளந்து பார்த்துவிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
 • 108
Added news 
நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தனது பெற்றோர் இறந்துவிட்டதால், சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருவதாகவும், அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.அதைக் கேட்ட சமந்தா, அவருக்கு தன் சொந்த செலவில் ஒரு கார் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதை வைத்து டிராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் யோசனை கூறியிருந்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக நடிகை சமந்தா, அந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஏழைப் பெண்ணுக்கு உதவிய நடிகை சமந்தாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
 • 119
Added news 
பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு, தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் மகா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சிகளை விசாகப்பட்டினத்தில் படமாக்கி வருகிறார்கள். ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகளை படமாக்க அழைத்தபோது அவர் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து விட்டாராம்.கொரோனா இரண்டாவது அலை பரவுவதால், நெடுந்தொலைவுக்கு பயணம் செய்து என்னால் வர முடியாது என்று சொல்லி அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி உள்ளார்.
 • 109
Added news 
நடிகை நஸ்ரியா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவரது முதல் தெலுங்கு படமாகும். இப்படத்தில் நானி ஹீரோவாக நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அன்டி சுந்தரினிகி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி படமாக இது தயாராகிறது. “முதலாவது எப்போதுமே ஸ்பெஷல். அதனால் இந்தப் படமும் எனக்கு ஸ்பெஷல் தான்” என நடிகை நஸ்ரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 • 110
Added news 
ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் பலருக்கு புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டாகி வருகிறது. சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ்க்கு பின்னர் சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
 • 110
Added a comment to with image 
 • 112
Added a comment to with image 
 • 112
Added news 
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.26 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.08 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 • 112
 • 112
 • 0 0 0 0 0 0
  • 0 0 0 0 0 0
   Not logged in users can't 'Comments Post'.
   Added news 
   தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பு விதிகளை பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநகராட்சி, சுகாதார துறையின் ஆலோசனைப்படி போலீசார் செயல்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
   • 116
   Added news 
   தமிழகத்தில் சென்னை மெரினா உள்பட எந்த கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியிலும் கடற்கரைக்கு செல்லும் பொது மக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு புதுச்சேரியில் தொடங்குகிறது. இதனை அடுத்து புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாலை 5 மணிக்கு மேல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் போல் மொத்தமாக அனுமதி இல்லை என்று கூறாமல் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி அரசு பொதுமக்களை கடற்கரையில் அனுமதித்து உள்ளதால் அந்த மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
   • 116