உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதுஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று புதன்கிழமை (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்டிருந்தது.இந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன், புதிய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது000
நாட்டில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விளம்பரங்கள் முற்றிலும் பொய்யானது எனவும், சிறுநீரக கொடுப்பனவு, அஸ்வசும, உர மானியம், மீன்பிடி மானியம் என்பன செலுத்தும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது000
நெடுந்வு துறைமுகத்திலிருந்து இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - நெடுந்தீவில் இருந்து நேற்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்த வேளை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்தது.இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளித்த நிலையில், இதனை அவதானித்த நெடுந்தீவு மக்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டதுடன் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது கரைக்கு கொண்டுவரப்பட்டது.அதேவேளை, குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தனர்.இச் சம்பவத்தால் படகில் பயணித்த மக்கள் பதற்றமான நிலையினை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். வெவ்வேறு தரப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வானிலை முன்னறிவித்தலைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.000
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம் பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது. A35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது00
நெல்சன், செக்ஸ்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (02) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 3 ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் குசல் பெரேரா குவித்த சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்தை 7 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.இந்தப் போட்டியில் 44 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த குசல் பெரேரா, இலங்கைக்கான அதிவேக சர்வதேச ரி 20 கிரிக்கெட் சதத்தைக் குவித்து மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலையில் 2011 இல் திலக்கரட்ன டில்ஷான் 55 பந்துகளில் குவித்த சதமே இலங்கைக்கான அதிவேக சர்வதேச ரி20 சதமாக இதற்கு முன்னர் இருந்தது.இலங்கையின் இந்த வெற்றியில் குசல் பெரேராவின் அதிரடி சதமும் அணித் தலைவர் சரித் அசலன்கவின் சகலதுறை ஆட்டமும் முக்கிய பங்காற்றின.சரித் அசலன்க தனது முதல் 3 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்திய போதிலும் கடைசி ஓவரில் 25 ஓட்டங்களைத் தாரைவார்த்தார்.எவ்வாறாயினும் மற்றைய பந்துவீச்சாளர்கள் கடைசி 5 ஓவர்களை ஓரளவு கட்டுப்பாட்டுடன் வீசி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.இதேநேரம் நியூஸிலாந்து மண்ணில் 2006 க்குப் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.இப் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டியபோதிலும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து கைப்பற்றியது. கடைசிப் போட்டியில் இலங்கையின் வெற்றி இலகுவாக அமையவில்லை. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மிகத் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையானது இந்தத் தொடரில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.பெத்தும் நிஸ்ஸன்க (14), குசல் மெண்டிஸ் (22) ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் எதிர்பார்த்தளவு திறமையாக துடுப்பெடுத்தாடவில்லை.மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.இதனை அடுத்து குசல் பெரேரா, சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்த அணியை பலமான நிலையில் இட்டனர்.குசல் பெரேரா 46 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களை விளாசினார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2013 இல் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான குசல் பெரேரா கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து கன்னிச் சதத்தைக் குவித்தார். சரித் அசலன்க 24 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.டிம் ரொபின்சன், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 44 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். டிம் ரொபின்சன் 37 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.9 ஆவது ஓவரில் பந்துவீச்சில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சரித் அசலன்க, தனது முதல் 3 ஓவர்களில் மார்க் செப்மன், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து நியூஸிலாந்தின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.எவ்வாறாயினும் தனது கடைசி ஓவரில் 25 ஓட்டங்களை சரித் அசலன்க அள்ளிக் கொடுத்தார். அதில் டெரில் மிச்செல் 4 சிக்ஸ்களை விளாசியிருந்தார். ரச்சின் ரவிந்த்ரா 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.மத்திய வரிசையில் டெரில் மிச்செல் 35 ஓட்டங்களையும் ஸக்கரி பௌல்க்ஸ் 21 ஆட்டம் இழக்காமல் ஓட்டங்களையும் மிச்செல் சென்ட்னர் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் சரித் அசலன்க 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக குசல் பெரேரா; தொடர்நாயகனாக ஜேக்கப் டஃபியும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது000
எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி (ODI) கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் பெப்ரவரி ஆறாம் திகதி முதல் 10 திகதி வரை நடைபெறும். ஒருநாள் போட்டி பகல்-இரவு போட்டியாக பெப்ரவரி 13 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் (WTC) ஒரு பகுதியாகும், தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் உறுதியான வெற்றி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது.இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு அணிக்கே வாய்ப்புள்ள நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைய மூன்று அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகின்றது.இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. எனினும் இந்திய அணியின் தகுதி தொடரின் சாதகமான முடிவுகளைப் பொறுத்தது.இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்றால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்பதுடன் மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது சாதகமான முடிவை எதிர்பார்க்க வேண்டும்.தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வாய்ப்புகளை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், மெலிதான நம்பிக்கையில் உள்ளது.இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியும், நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்ததும் இலங்கைக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.இருப்பினும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என்ற தோல்வி இலங்கை அணியின் வாய்ப்புகளை கணிசமாக பாதித்துள்ளது.இந்நிலையில, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாட வேண்டுமாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.மேலும் சிட்னியில் நாளை ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிய வேண்டும். இது இலங்கை அணியின் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தும்.000
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கூறியது போன்று நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.படு பாதாளத்தில் வீழந்து கிடந்த நாட்டை மீளவும் கட்டியெழப்பிய ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் நாடு இன்னமும் வீழ்சியடைந்த பொருளாதாரத்தில் இருந்து முழுமையாக மீட்சி பெறவில்லை. வீழ்ந்த இடத்தில் நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும். குடும்பமாக உழைக்கும் போது குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறுதான் நாட்டுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதுஆனால், அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காகப் போன்று இவை நாட்டு நலனுக்காக எடுக்கப்பட வேண்டும். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருந்தார் இதையே தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித்தும் தெரிவித்துள்ளமையானது முன்னாள் ஜனாதிபதிய கூற்றை மேலும் உறுதி செய்துள்ளதாக பார்க்க முடிகின்றது.000
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது.போர்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்திய அணிக்கு எழுந்துள்ள இயல்பற்ற நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.இந்நிலையில், மெல்போர்னில் கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஓய்வு அறையில் வைத்து, இந்திய அணி வீரர்களை கடுமையாக கண்டித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த செய்தியும் வெளியாகியுள்ளது.இந்தநிலையில் வீரர்களின் ஓய்வு அறையில் இடம்பெறுகின்ற கருத்தாடல்கள், அந்த ஓய்வு அறைக்;கு வெளியே கசிவது சிறந்ததல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்துரைத்துள்ளார்.எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா மதிப்புமிக்க போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை விட்டுக்கொடுக்கும் தருவாயில் உள்ளது எனினும் இதனை தவிர்க்கவேண்டுமானால், இந்தியா நாளை சிட்னியில் ஆரம்பமாகவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.இதன்போதே தொடரை 2க்கு2 என்ற அளவில் சமன் செய்யமுடியும். எனவே இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் பாரிய அழுத்தம் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 000
மார்கழி மாதம் பீடை மாதம் என்று தவறாக கூறுவர் .பீடுடைய மாதம் என்றே சொல்ல வேண்டும். அதாவது மார்கழி மாதமானது தேவர்களுக்கு அதிகாலையான பிரம்ம முகூர்த்த மாதமாகும். இதனால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது. மார்கழி மாதத்தை வழிபாட்டுக்குரிய மாதமாக ஒதுக்க வேண்டும். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவான் மஹாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள்.மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.மார்கழி மாதத்தில்தான் சிவனுக்காக திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காக தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் இடம் பெறுகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வரவேண்டும். அவனோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவை நோன்பின் நோக்கம்.மார்கழி மாதம் அதிகாலை வேளையில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கியமானது பஜனை. தொன்று தொட்டு நடைபெறும். இந்தச் சம்பிரதாய பஜனை மிகவும் சிறப்பானது. இதில் மிருதங்கம், வயலின், ஹார்மோனியம், கஞ்சிரா, புல்லாங்குழல், மோர்சிங் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படும். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருவருட்பா மற்றும் சமயப் பெரியவர்களின் கீர்த்தனைகளில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அடியார்கள் பாடுவார்கள்.\மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடைபெறும். பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூவை செருகி கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும்.சில வீடுகளில் அந்த பூ உருண்டையை வரட்டியாக தட்டி சேகரித்து பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள். மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.
மேஷம்குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடைத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சில பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை ரிஷபம்புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கவலை அகலும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம்கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மின்சாரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வேளாண்மை தொடர்பான பணிகளில் அலைச்சல் உருவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலம் மன வருத்தங்கள் நேரிடலாம். எதிர்பார்த்திருந்த சில நிகழ்வுகள் காலதாமதமாகவே நிறைவேறும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கடகம்நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். சிக்கல் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை சிம்மம்தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிபுத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக நிறைவு பெறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் துலாம்குழந்தைகள் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உருவாகும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு தனுசுதனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகரம் வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்விப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் கும்பம்பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்த சில காரியங்களில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம்கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
குரோதி வருடம் மார்கழி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 2.1.2025.சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.02 வரை துவிதியை. பின்னர் திருதியை. இன்று அதிகாலை 01.31 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
🎊இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடர, மாற்றங்கள் மலர, மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும்.. 🎉இந்த புத்தாண்டில் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களும் வளமையும் அடைந்து வாழ வேண்டும்🌱இனிய புத்தாண்டு தின வாழ்த்துகள்!!!
பிறந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வேண்டும் என தமிழ் பூங்கா இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றதுஇந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பட்டாசுக்கள் கொளுத்தி பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.கொழும்பு துறைமுக நகரில் கவர்ச்சிகரமான வாணவேடிக்கைகள் இடம்பெற்றதுடன், தாமரை கோபுர வளாகத்தில் வண்ண விளக்குகளுடன் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.நாடளாவிய ரீதியாக உள்ள மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் நேற்றிரவு இடம்பெற்றன. இதேவேளை, பசுபிக் பிராந்தியத்திலுள்ள கிரிபாட்டி தீவு, இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 3.30க்கு முதலாவதாக 2025 புத்தாண்டை வரவேற்றது.கிரிபாட்டி மக்கள் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிரிபாட்டி தீவுக்கு பிறகு உலகின் முதல் நாடாக நியூசிலாந்து 2025 புத்தாண்டை வரவேற்றது.இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 க்கு அந்த நாட்டில் புத்தாண்டு பிறந்தது. அதனையடுத்து அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் 2025 புத்தாண்டை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது000
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டில் 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.000
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு விமான சேவைகள் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடியாகவும், ஒரு விமானச் சேவை மாலைத்தீவின் ஊடாகவும் இயக்கப்படுகின்றன. இதன்படி, நாளைமுதல் வியாழக்கிழமைகளிலும் இலங்கைக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை வாராந்தம் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாள்களும் இலங்கைக்கான விமான சேவை முன்னெடுக்கப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து வாரத்தின் 7 நாட்களும் இலங்கைக்கான விமான சேவைகளை இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.000
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு விமான சேவைகள் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடியாகவும், ஒரு விமானச் சேவை மாலைத்தீவின் ஊடாகவும் இயக்கப்படுகின்றன. இதன்படி, நாளைமுதல் வியாழக்கிழமைகளிலும் இலங்கைக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை வாராந்தம் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாள்களும் இலங்கைக்கான விமான சேவை முன்னெடுக்கப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து வாரத்தின் 7 நாட்களும் இலங்கைக்கான விமான சேவைகளை இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.000
புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சலால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்."க்ளீன் ஶ்ரீலங்கா" (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அத்துடன், குறித்த சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி, புதிய அரசியல் கலாசாரத்துடன் புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாக நாடு முழுவதும் பரவியுள்ளதாக தெரிவித்தார்.ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அரசியல் அதிகாரத்தின் தலையீடும் முன்னுதாரணமும் மாத்திரம் போதாது என ஜனாதிபதி தெரிவித்தார்.அத்தோடு, அரச நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாக புரிந்து கொண்டு அதற்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.000
அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி கருத்தரங்குகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றது. 000
2024 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.குறிப்பாக வடமாகாணத்தில் 3445 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 946 வர்தகர்களிற்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 05 இலட்சத்து 74 ஆயிரத்து 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் 774 விசேட சுற்றுவளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 126 விசேட சுற்றிவளைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் கசித்த 3 வினாக்களுக்குப் புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும் உயர்நீதிமன்றம் பரீட்சைகள் திணைக்களத்துக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, உயர் நீதிமன்றின் உத்தரவு தொடர்பில் ஆராயப்படும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவற்றை கருத்திற்கொண்டு மிக விரைவில், புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளையும் வெட்டுப்புள்ளிகளையும் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதேவேளை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்00
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ். மாவட்ட டெங்கு நோய் தாக்கம் நவம்பர் மாதம்முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நவம்பர் மாதத்திலே 134 நோயாளர்களும் டிசம்பர் மாதத்திலே 241 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தார்கள்.டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது. டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 18 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். அதேபோன்று 26, 27 ஆம் திகதி அதிகளவு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள்.எனவே, திடீரென அதிகரித்த அதிகரிப்பாக இது காணப்பட்டது. அதற்கு பின்னர் 28ஆம் திகதி 8 நோயாளர்களும் 29 ஆம் திகதி 12 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தார்கள்.ஆகையால், இப்படியான சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டால் ஜனவரி மாதத்தில் அதிகளவு டெங்கு பரம்பல் ஏற்படலாம். டெங்கு இறப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.மேலும், எங்கள் பூச்சியியல் ஆய்வுகளை அவதானிக்கின்ற பொழுது டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பின் செறிவு யாழ். மாவட்டத்தில் அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது.யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 2024 ஆம் ஆண்டில் 5890 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு இறப்பு ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.டெங்கு நோய் கட்டுப்பாடுகளை நாம் தீவிரபடுத்த வேண்டிய சூழல் உள்ளது. அந்தவகையில் பிரதம செயலாளர் தலைமையில் விசேட டெங்கு தடுப்பு கூட்டம் இடம்பெற்றது.அதற்கு பின்னர் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஒலிபெருக்கி பிரசாரத்தினை யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொண்டோம்.உள்ளூராட்சிமன்ற உதவியோடு கொள்கலன்களை அகற்றும் செயற்திட்டத்தினை முன்னெடுத்தோம். இதற்கு மேலதிகமாக விசேட நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் புகையூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டு வருகின்றன.அத்துடன், பூச்சியியல் ஆய்வு நடவடிக்கைகளின் உதவிகளுக்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பணியாளர்களும் இணைந்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 000