-
- 2 friends
மார்கழி மாதத்தின் சிறப்புகள்
மார்கழி மாதம் பீடை மாதம் என்று தவறாக கூறுவர் .பீடுடைய மாதம் என்றே சொல்ல வேண்டும். அதாவது மார்கழி மாதமானது தேவர்களுக்கு அதிகாலையான பிரம்ம முகூர்த்த மாதமாகும். இதனால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது. மார்கழி மாதத்தை வழிபாட்டுக்குரிய மாதமாக ஒதுக்க வேண்டும்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவான் மஹாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்காக திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காக தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் இடம் பெறுகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வரவேண்டும். அவனோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதம் அதிகாலை வேளையில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கியமானது பஜனை. தொன்று தொட்டு நடைபெறும். இந்தச் சம்பிரதாய பஜனை மிகவும் சிறப்பானது. இதில் மிருதங்கம், வயலின், ஹார்மோனியம், கஞ்சிரா, புல்லாங்குழல், மோர்சிங் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படும். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருவருட்பா மற்றும் சமயப் பெரியவர்களின் கீர்த்தனைகளில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அடியார்கள் பாடுவார்கள்.\
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடைபெறும். பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூவை செருகி கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும்.
சில வீடுகளில் அந்த பூ உருண்டையை வரட்டியாக தட்டி சேகரித்து பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள். மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·