Feed Item
·
Added a news

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு விமான சேவைகள் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடியாகவும், ஒரு விமானச் சேவை மாலைத்தீவின் ஊடாகவும் இயக்கப்படுகின்றன.

இதன்படி, நாளைமுதல் வியாழக்கிழமைகளிலும் இலங்கைக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை வாராந்தம் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாள்களும் இலங்கைக்கான விமான சேவை முன்னெடுக்கப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து வாரத்தின் 7 நாட்களும் இலங்கைக்கான விமான சேவைகளை இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

000

  • 631