கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது
கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த தப்பியோடிய குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் ஒருவர் மொன்றியலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான பிரயன் பியுன்டன் க்ராமாஜோ என்ற நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த 2025 ஜூலை 17 அன்று டொரண்டோவில் உள்ள யோர்க்டேல் ஷாப்பிங் மையத்தின் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக டொரண்டோ பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட கனடாவின் மிகவும் தேடப்பட்ட 25 குற்றச்சாட்டு நபர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் இடம்பெற்றிருந்தார்.