நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 9.1 சதவீதமான பாடசாலை மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தற்போது மாணவர்கள் மத்தியில் உளநலப்பிரச்சினைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் 22 சதவீதமானவர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.
12 சதவீதமானவர்கள் பிரச்சினைகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர்.
18 சதவீதமானவர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
7.5 சதவீதமானவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பது பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் சிரந்திகா விதான குறிப்பிட்டுள்ளார்.
கையடக்க தொலைபேசி, சமூக ஊடக பாவனை, தனிமைப்படல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.
000
- 1058