Feed Item
Added article 

ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.

சந்திரபாபு பிறந்தது தூத்துக்குடி அவரது தந்தை செல்வந்தர், சுதந்திர வீரன் என்ற நாளிதழை அவர் நடத்தினார். சுதந்திர காலத்தில் அந்த நாளிதழ் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் குடும்பத்தை இலங்கை கொழும்புக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் தந்தை மற்றொரு செய்தித்தாளில் பணிபுரிந்தார். பள்ளிப்படிப்பை இலங்கையில் படித்த சந்திரபாபு 1943ல் சென்னை தனது குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணி வந்தார்.1947ல் தன அமராவதி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார்.

சாப்ளின் ஸ்டைலில் உடல் மேனரிசங்கள் செய்ததும், மேற்கத்திய நடனங்களை லாவகமாக ஆடியதும், சென்னை பாஷையில் மிகுந்த நிபுணத்துவம் இருந்ததும் சந்திரபாபுவின் ப்ளஸ்.

இவர் எல்லோரிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இவரின் பாணி கொஞ்சம் திமிர் பிடித்தவரோ என சொல்லவைக்கும். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாகவும் அதே நேரம் அவரிடம் இருந்த நற்குணங்களையும் இயக்குனர் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

எம்.ஜி.ஆரில் இருந்து சிவாஜி வரை தன்னை விட இளையோர் மூத்தோர் அனைவரையும் மிஸ்டர் சேர்த்து பெயர் சொல்லி அழைப்பதுதான் இவரது பாணி.

திருமணம் முடிந்த அன்றே மனைவியின் காதல் அறிந்து அவருடனே சேர்த்து வைத்த நல்ல மனதுக்காரர் என்றாலும், இவரின் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாத வெளிப்படையான செய்முறைகள் நடவடிக்கைகள், ஆங்கிலத்திலேயே பேசி திரிவது, அடுத்தவர்களிடம் மரியாதை இல்லாதது போல் நடந்துகொண்டது போல் தெரிந்தது. இதுவும் இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இப்படி எண்ணற்ற காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்க இருந்தார் , அந்த படத்தில் நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் விலகினார், இதற்கு சந்திரபாபுவின் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணியிடம் தவறாக நடந்துகொண்ட காரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இந்த படத்துக்கு வாங்கிய கடன்கள் கொஞ்சம் இவரை பதம் பார்த்தது. அதற்கு பின்பு எம்.ஜி.ஆர் தனது அடிமைப்பெண் படத்தில் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தை வழங்கி இருக்கிறார் அதில் கொஞ்சம் தேறி வந்த சந்திரபாபு, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை தயாரித்து தோல்வியடைந்தார் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் சந்திரபாபுவின் தனிப்பட்ட செயல்பாடுகளும் அவரை அதல பாதாளத்தில் தள்ளி பொருளாதாரம் எதுவும் இல்லாமல் ஆக்கியது. இயக்குனர் ஏபி நாகராஜனின் கட்டுப்பாட்டில் சின்ன சின்ன உதவிகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் . 1974ல் தனது 46வயதில் இவர் மரணமடைந்தார்.

இவர் இறந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் இவரின் இறுதி சடங்குக்கு உதவி செய்துள்ளார். சென்னையில் உள்ள குய்பில் தீவில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

  • 1027