Feed Item
Added a post 

மேஷம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். வர்த்தக செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

ரிஷபம்

இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். திடீர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ரீதியான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

கடகம்

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

சிம்மம்

மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கன்னி

புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனை பணிகளில் இலாபம் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

துலாம்

உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் புது விதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

தனுசு

புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

கும்பம்

திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புதிய பொருட்ச்சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை

மீனம்

அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயணம் தொடர்பான செயல்களில் புதுமையான அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

  • 1222