பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவிக்காக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, சஞ்வீவ மெதவத்த, ரன்மல் கொடிதுவக்கு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிரி ஜயலத் மற்றும் எம்ஜீஆர் எஸ் தமிந்த ஆகிய அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
அடுத்ததாக இலங்கையின் 37 ஆவது பொலிஸ் மா அதிபர் ஆவார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி நிச்சயமாக அவரை பதவியில் இருந்து நீக்குவார்.
நியமிக்கப்படும் அடுத்த பொலிஸ் மா அதிபர் பின்னர் ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட்ட, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியை நியமிக்க எதிர்ப்பார்ப்பதாக அறியப்படுகிறது
000
- 1056