இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கை யாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். சோம்பல் விலகும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் செல்லும் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள்.
துலாம்: பிள்ளைகளின் பிடிவாதம் கூடும். வாகனம் செலவு வைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்புடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் குறை சொல்லாதீர். வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பண வரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
தனுசு: திட்டமிட்ட பணியை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பால்ய நண்பர் களை சந்தித்து மகிழ்வீர். கருத்துமோதல் நீங்கி வியாபாரத்தில் புதிய பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: காரியத் தடைகள் வரக்கூடும். மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
