Ads

அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ

0 0 0 0 0 0
 • 470
Info
Title:
அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
02:34
Category:
Created:
Updated:
 ·   · 5 videos
 •  · 6 friends
 •  · 6 followers
Comments (0)
Messenger
TamilPoonga
I create Cinema news page https://tamilpoonga.com/page/articles-home you can post Cinema news here now.
TamilPoonga
beesiva
hi
beesiva
how r u
beesiva
you sent payment ?
TamilPoonga
Heloo
TamilPoonga
I am fine.
TamilPoonga
Yes, I send it. Did you get it?
TamilPoonga
If, you didn't get let me know pls, I have to find out?
beesiva
when you sent? how much >> Please let me know..
beesiva
so that i can check it
TamilPoonga
5 thousand , I Send last Sunday (June 27) Monday or Tuesday should be in bank.
TamilPoonga
Are you have online bank? Are you check online?
beesiva
tomorrow i iwll check it in ATM
beesiva
tomorrow this time i will message to you.....
beesiva
this .. beesia -- id points submitted to you.. u saw it ?
TamilPoonga
Where do you submitted?
TamilPoonga
you mean in points table. I show that. I added beesiva and Gomathisiva both point together. The point you submitted, I added some extra ( I was testing). Sorry I should remove after test by mistake I miss that to remove. That's not your total points.
beesiva
ok no problem...
1
beesiva
5 thousand , amount recd. thanks. rec.d on. 28 June.
1
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Added a news 
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் நேற்று (27) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடனான கலந்துரையாடலின் பின்ன இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்ர் இவ்விடயத்தை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாலை வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கூடி இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.வவுனியாவில் அரசாங்க அதிபராக இருந்த பந்துலசேனா எனும் அதிகாரி பந்துல சேனாவாக இருந்தால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய உருத்து எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி கொடுத்து இன்றும் எங்களுடைய இனத்தின் விடுதலை, எங்கள் தேசத்தின் விடுதலை, எங்களுடைய மக்களின் விடுதலையை அடையாது இருக்கின்ற பொழுதும், 13 வது திருத்த சட்டத்திலும் கூட மிக அரிதாக இருக்கின்ற சில உரிமைகள் அதைவிட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை உரிமை, தங்களுடைய தேசத்தில், தங்களுடைய மக்கள் மத்தியில், தங்களுடை பிறப்புரிமை தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே நடார்த்த வேண்டும் என்பதை நாங்கள் இன்று நிலைநாட்டி பேசினோம்.வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள். அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும், தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பந்துலசேனாவினுடைய நியமனத்தை திருப்பி பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை செய்வதற்குஅவர்களது மொழியில் நிர்வாகத்தை நடார்த்தக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம்.1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் தனிச் சிங்கள மொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நீதிமன்றங்களில் சிங்கள மொழிக்காக ஊழியர்களை அனுப்பியபொழுது, தந்தை செல்வாவும், அப்பொழுது இருந்த கட்சி தலைவர்களும் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.அந்த விடயத்தினையும் நாங்கள் இன்று ஆராய்ந்திருந்தோம். ஆகையினால் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்குள் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 • 16
Added a news 
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுவின் முன்னிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளில் லிபரல் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சிங்க தேசிய முன்னணி மற்றும் சமத்துவக் கட்சி ஆகியன தமது பங்களிப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக ரோஹனதீர தெரிவித்தார்.மௌபிம ஜனதா கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகியவை இதுவரை தமது பங்களிப்பை உறுதிப்படுத்தவில்லை.
 • 16
Good Morning...
 • 23
Added a news 
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி இருவரது சடலங்களும் கிணற்றில் இருந்து இன்று(27-07-2021)பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மல்லாவிஅனிஞ்சியன்குளம் பகுதியில்உள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக கின்ற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதஅதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31)பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇருவரது சடலங்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
 • 71
Added a news 
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான  மக்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்றது.இதன் போது குறித்த தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார்,மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள்,பொலிஸ்,ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.-இதன் போது எதிர் வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம் பெற உள்ள மடு திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.-சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதார துறையினரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.மேலும் உரிய திணைக்களங்களின் உதவியோடு,மடு திருத்தலத்திற்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டது.-குறிப்பாக நீர்,சுகாதாரம்,மருத்துவம்,போக்குவரத்து போன்ற தேவைகளை உரிய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.-சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அடுத்த கூட்டங்களில் தீர்மானங்களை முன்வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.-தற்போதைய சூழ்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழி முறைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து கொள்ள முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதிகமான திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 • 71
Added a news 
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை இன்றைய தினம் எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடனான கலந்துரையாடலின் பின்ன இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்ர் இவ்விடயத்தை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று மாலை வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் தமிழ்த் தெசிய கூட்டமைப்பை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கூடி இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.வவுனியாவில் அரசாங்க அதிபராக இருந்த பந்துலசேனா எனும் அதிகாரி பந்துல சேனாவாக இருந்தால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய உருத்து எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி கொடுத்து இன்றும் எங்களுடைய இனத்தின் விடுதலை, எங்கள் தேசத்தின் விடுதலை, எங்களுடைய மக்களின் விடுதலையை அடையாது இருக்கின்ற பொழுதும், 13வது திருத்த சட்டத்திலும் கூட மிக அரிதாக இருக்கின்ற சில உரிமைகள் அதைவிட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை உரிமை, தங்களுடைய தேசத்தில், தங்களுடைய மக்கள் மத்தியில், தங்களுடை பிறப்புரிமை தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே நடார்த்த வேண்டும் என்பதை நாங்கள் இன்று நிலைநாட்டி பேசினோம்.வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள். அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும், தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பந்துலசேனாவினுடைய நியமனத்தை திருப்பி பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை செய்வதற்குஅவர்களது மொழியில் நிர்வாகத்தை நடார்த்தக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம்.தமிழ் மக்கள் மத்தியில் தகுதியுடைய எத்தனையோபேர் இருக்கின்றார்கள். சித்தியடைந்தவர்கள், அனுபவம் மிக்க ஆளுமையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிலிருந்து ஒரு பிரதம செயலாளரை வடக்கு மாகாண சபைக்கு நியமிக்க வேண்டும் என்று இன்றைய தினம் இங்கு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல் இருப்பதற்காக நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.எங்களுடைய தேசத்தில் நாங்கள் எங்களை ஆளுவதற்கும், எங்களுடைய பண்பாடு, மொழி, கலை, கலாச்சாரங்களை நாங்களே கையாள்வதற்கும், எங்கள் மக்களையும், தேசத்தையும், ஆட்சி உரிமையையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றாக அணிவகுத்து ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதையும் இன்றைய தினம் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.இவ்விடயம் அடுத்த மாத்திலிருந்து எங்களுடைய பிரதேசங்களிலும், உள்ளுராட்சி மன்ன தலைமைத்துவங்களில் கழு் அவ்வந்த பிரதேச மக்களை சந்தித்து எங்களுக்கு கிடைக்க வேண்டியதும், பெறவேண்டியதுமான உரிமைகள் தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வே்ணடும் என்பதையும் இன்றைய தினம் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.அடுத்த மாத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தலைமைத்துவத்தில் இருக்கின்றவர்கள் இணைந்து முன்னெடுக்க உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் பிரதம செயலாளரின் நியமனம் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஊடாக ஒன்றுபட்டு பிரதம செயலாளரை மாற்றி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய தலைமை நிர்வாகி ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கத்துடுன் பேச வேண்டும்.அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஒன்று கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் இங்கே தீர்மானித்திருக்கின்றோம்.எங்களுடைய உறுப்பினர்கள் மிகத் தெளிவாக இங்கு பல விடயங்களை பேசியிருக்கின்றார்கள். அதில் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவது, வைத்தியசாலை அதிகாரங்களை மத்திய அசின்கீழ் கொண்டு செல்வதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டது.இவ்விடயம் தொடர்பில் மக்கள் மற்றும் கற்றவர்கள் மத்தியிலும் கொள்கை தெளிவில்லாத நிலை இருக்கின்ற நிலையிலும், அவ்வாறு மருத்துவ மனைகளையும், பாடசாலைகளையும் மத்திய அரசின் கீழ் எடுக்க விடாமல் தடுக்க வேண்டும்.ஏற்கனவே பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பாடசாலைகளையும் மாகாண சபை அதிகாரங்களிற்குள் மீள எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அரசியல் தீர்வுக்காக முயற்சிக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்தும் மத்திக்கு அதிகாரங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளிற்கு எதிராகவும் நாங்கள் செயற்பட வேண்டும்.அதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடார்த்த வேண்டுமெனவும், அடுத்த கட்டமாக எவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் இன்றைய தினம் பேசியிருக்கின்றோம்.1956ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தனிச்சிங்கள மொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நீதிமன்றங்களில் சிங்கள மொழிக்காக ஊழியர்களை அனுப்பியபொழுது, தந்தை செல்வாவும், அப்பொழுது இருந்த கட்சி தலைவர்களும் பெரும் போராட்டங்களை நடார்த்தியிருக்கின்றார்கள்.அந்த விடயத்தினையும் நாங்கள் இன்று ஆராய்ந்திருந்தோம். ஆகையினால் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்குள் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 • 72
Added a news 
ஒரு பசு அடங்கலாக இறைச்சிக்காக எடுத்துச்செல்லப்பட்ட 9 மாடுகளுடன் ஒருவர் கைது பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சியிலிருந்து கூலர் வாகனம் ஒன்றில் இறைச்சிக்காக மாடுகள் எடுத்த செல்லப்படுவது தொடர்பில் பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, பளை நகரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது ஒரு பசு மாடு அடங்கலாக 9 மாடுகள் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில் கால்நடைகள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் விசாரைணை மேற்கொண்டு வரும் பளை பொலிசார், குறிதத் விடயம் தொடர்பில் நாளைஎ கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 • 74
Added a news 
முல்லைத்தீவு  மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்முல்லைத்தீவு மல்லாவிஅனிஞ்சியன்குளம் பகுதியில்உள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதஅதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31)பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது திருமணம் செய்துள்ளனர்குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇருவரது சடலங்களும் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்  அடிப்படையில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 • 72
Added a news 
அமைச்சர் இல்லத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் கிசாலினியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்க இணைப்பாளர் வாசுகி வள்ளிபுரம் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இன்றைக்கு ஊடகங்களில் பார்க்கின்ற செய்திகளிலே 15 வயது சிறுமி கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்து தந்தையினால் கொடுமைப்படுத்தல், தந்தையினால் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் கர்ப்பம், தந்தையினால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போன்ற செய்திகளை கடந்த சில நாட்களாக நாங்கள் பார்த்து வருகின்றோம்.இந்த செய்திகளை கேட்கின்றபொழுது உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. உருவத்திலே மனிதர்களாக இருக்கும் இவ்வாறானவர்கள் குணத்திலே மிருகங்களாக இருப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.உண்மையிலே, நகர் மற்றும் கிராமப்புறங்களில் சிறுமிகள் வன்புனர்வுக்குட்படுதல், துன்புறுத்தப்படல் உள்ளிட்ட விடயங்கள் கௌரவத்திற்காக வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. சில பெற்றோர் அதனால் கௌரவம் பாதிக்கும் என கருதுகின்றனர்.வித்தியாவின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும், கிசாலினியின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும் வெளிக்கொணரப்பட்டிருந்தால் இன்று வித்தியாவின் கொலையாக இருக்கலாம் அல்லது கிசாலினியின் கொலையாக இருக்கலாம் அவை நிறுத்தப்பட்டிருக்கும்.கொலைகளிற்கு முன்னரான பகுதிகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. இவ்வாறான கொடுமைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றபொழுது முறையிடுங்கள், எங்களைப்போன்று பல மாவட்டங்களில் பெண்கள் அமைப்புக்கள், செயற்பாட்டு குழுக்கள் கிராமங்களிலும், மாவட்டங்களிலும் செயற்பட்டு வருகின்றது.ஒருவர் தான் விரும்பாத ஒரு விடயம் இடம்பெறுகின்றது, அல்லது துன்புறுத்தல் இடம்பெறுகின்றது என உணர்ந்தால் அவ்வாறான பெண்கள் அமைப்புக்களிடம் அல்லது எங்களிடம் இரகசியமான முறையில் முறையிடுங்கள்.அவ்வாறான முறைப்பாட்டின் ஊடாக இரகசியமான முறையில் குற்றவாளியை அடையாளம் கண்டு அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.சகல பெற்றோரும் உங்களது பிள்ளைகளில் எவ்வளவு கவனம் கொள்கின்றீர்களோ, அதேபோன்று இவ்வாறான குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டம். பிள்ளைகள் உறவினர்கள் ஊடாகவோ அல்லது தமக்கு அநீதி, அல்லது துஸ்பிரயோகங்கள் இழைக்கப்படுகின்றபோது என உணர்கின்ற பட்சத்தில் அவைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம் கொடுமைகள், கொலைகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.இன்று முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டிலே ஆரம்ப காலத்தில் வேலை செய்த பெண்கள் சிறுவர்களிடத்திலே விசாரணைகள் நடத்தப்படுகின்றபொழுது, நானும் அதில் துன்புறுத்தப்பட்டேன் என்ற விடயம் கிசாலினியின் மரணத்திற்கு பின்னர் தெரிய வருகின்றது.தற்பொழுது தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் கிசாலினியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது.துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகின்றதாக இருந்தாலும், தனது உரிமைக்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக இருந்தாலும் இலங்கையில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் எழுத்துருவில் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.சிறுவர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் குற்றவாளியை மூடிமறைக்காதும், கௌரவத்தை பாராதும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதன் ஊடாகவே வித்தியா, கிசாலினி போன்றவர்களின் மரணம் இடம்பெறாது தடுக்கவும், சிறுவர்களிற்கான ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கவும் முடியும்.ஒரு மரணம் சம்பவிக்கும்வரை காத்திருக்காமல், அதற்கு முன்னராக துஸ்பிரயோகங்கள் இடம்பெறுமிடத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் உடனடியாக கொண்டு வருவதற்கு சகல மக்களும் விழிப்புணர்வுடன் சட்டத்தை அணுகி நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகின்றேன் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
 • 73
Added a news 
பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்படடள்ளது.அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக (26.07.2021) ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பயனாளர்கள் கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏறாபாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடலில் வடக்கு மாகாணத்தில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில், கௌதாரிமுனை பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் நிரந்தர வாழ்வாதாரத்தினை வழங்கக் கூடிய கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதனால், இதுவரை சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலட்டைப் பண்ணைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில் இதுவரை பொருத்தமான 16 இடங்களை நக்டா எனப்படும் தேசிய நீரயல் வள அபிவிருத்தி அதிகார சபை அடையாளப்படத்தியுள்ள நிலையில், அவற்றில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 • 72
Added a news 
நேற்றைய தினம் (26)  இலங்கையில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 299,366 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 270,356 ஆக அதிகரித்துள்ளது.
 • 92
Added a news 
தமிழக பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவுரை குழுவில் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழக பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார். தற்போது அதை தொடர்ந்து தமிழக பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிடர் கழகத்தை சேர்ந்தவரான சுப.வீரபாண்டியன் அரசியல், இலக்கியம் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • 94
Added a news 
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவர்களை கவுரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றுபவர்களுக்கு தகைசால் என்ற புதிய விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்காக தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை உள்ளடக்கிய குழு ஒன்றையும் அமைக்க ஆணை பிறப்பித்துள்ளார்.
 • 92
Added a news 
திருக்கழுக்குன்றம் பகுதியில் இரவு நேரத்தில் பிரகாசமாக ஜொலித்தபடி மர்ம பொருள் ஒன்று விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் வானிலிருந்து பிராகசமான வெளிச்சத்தோடு மர்ம பொருள் ஒன்று அப்பகுதியில் விழுவதை கண்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்த விஏஓ மற்றும் போலீஸார் 10 கிலோ எடை கொண்ட அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த எடுத்து சென்றுள்ளனர். வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 • 93
Added a news 
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமூகமான நிலையில் இல்லை. இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை வெளியுறவு மந்திரி வெண்டி ஷெர்மன் சீனா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற ஆறு மாதத்துக்கு பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் சீனாவுக்கு சென்று நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும். வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா-சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கும் சூழலில் இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது.  மிகவும் தவறான வழிகாட்டுதலையும், ஆபத்தான கொள்கையையும் அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என சீனா கூறியுள்ளது.‌ துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் கூறுகையில், “சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அடக்கவும் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முயற்சிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம், சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே ஆகும்‌” என‌ கூறினார்.
 • 92
Added a news 
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர். 
 • 92
Added a news 
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர். 
 • 91
Added a news 
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர். 
 • 92
Added article 
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதுகுறித்தும் விசாரிக்கின்றனர்.ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ராஜ்குந்த்ரா அலுவலக ஊழியர்கள் 4 பேர் ‘அப்ரூவர்’ ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆறு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. ராஜ் குந்த்ராவை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளால் ஏற்கெனவே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மும்பை  குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டார். இந்த விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.போலீஸ் விசாரணையின்போது ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறிய ஷில்பா ஷெட்டி, அது முழுக்க, முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயலி என்றும் பண முதலீடு மட்டுமே ராஜ்குந்த்ரா தரப்பில் செய்யப்பட்டது என கூறி உள்ளார்.ஹாட்ஷாட்ஸ் செயலியில் பதிவேற்றப்படும் மாடல்களின் படங்கள் மற்றும் தங்களுடைய ஓடிடி படங்களில் நடிக்க வரும் மாடல்கள், நடிகைகளுக்கான கவர்ச்சி கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக ராஜ்குந்த்ரா நடத்தி வந்த வாட்ஸ் அப் குரூப்பில் கிடைத்த கடிதப் பரிவர்த்தனை நகலை ஷில்பா ஷெட்டியிடமும் ராஜ் குந்த்ராவிடமும் காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.அந்த கடிதத்தில், ஓடிடி படங்களில் குறிப்பிட்ட நடிகையை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக, அவரை பற்றிய குறிப்புகளை தயாரிப்பு நிறுவனமான தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவரை இறுதி செய்வதில் ஹாட்ஷாட்ஸ் அணியின் முடிவே இறுதியானது. தேர்வாகும் நபர், சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும். துணிச்சலான காட்சிகளில் மேலாடையின்றியும், பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஷில்பா ஷெட்டி, இதுபோன்ற வரிகள் ஆபாசத்தை தூண்டக்கூடியவை கிடையாது என்றும் அவை முழுக்க, முழுக்க படத்தின் கதைக்கு தேவைப்படும் கவர்ச்சி மட்டுமே என்றும் இதை நீதிமன்றத்தில் உரிய வகையில் தங்களுடைய தரப்பு வாதிடும் என்றும் தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.அவரது வாக்குமூலத்தை  பதிவு செய்த பின்னர், ஒரு மூத்த குற்றப்பிரிவு அதிகாரி, இந்த விஷயத்தில் நடிகைக்கு  இதுவரை எந்த தொடர்பும் இல்லை, மேலும் விசாரணை எதுவும் இருக்காது. இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு எந்தப் பங்கும் இல்லை. இதுவரையில், இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. எனவே நாங்கள் அவரை மீண்டும் விசாரிக்கப் போவதில்லை என்றார்.விசாரணையின் போது ஷில்பா ஷெட்டி உடைந்து கூச்சலிட்டார் என்றும், விசாரணையின் போது  உணர்ச்சிபூர்வமான ஷில்பா தனது கணவரிடம் இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக  சித்தரிப்பதாகவும், பல ஒப்புந்தங்கள் பாதிக்கப்பட்டு, என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் என  ஷில்பாஷெட்டி, ராஜ் குந்தராவை கடுமையாக திட்டினார். இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும்  பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 • 91
Added article 
முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ஒரு சிறந்த நகைச்சுவை படமாக இப்படம் திகழ்ந்து வருகிறது.தமிழில் சிறந்த காமெடி படம் என்றால் காசேதான் கடவுளடா படம் மட்டும்தான். இப்படத்திற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இயக்குனர் கண்ணன் இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார். இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு நடிக்க உள்ளனர்.இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார். சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்போது இப்படத்தில் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலமான புகழும் இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.புகழ் மற்றும் சிவாங்கிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் காம்போ மிகவும் பிரபலமாகும். சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். சிவாங்கி ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் புகழும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார்.
 • 91
Added article 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு இலலேன்னா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள்.தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவுக்கும் சினிமாவுக்கு போக ஆசை போல. சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.மாடர்ன் உடை அணிந்து தனது தங்க உடலை மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் “சூட்டுல வீடே பத்திக்கும்” என்று வர்ணித்து வருகிறார்கள்.
 • 91
Added article 
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் ஜோஸ்வா. இந்த படத்தை வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் என அறிவிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண் என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்ன ஆனாலும் சரி இந்த படத்தை திரையரங்கில்தான் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்து விட்டாராம். ஏனென்றால் இந்த படம் வருணுக்கு ஒரு அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கிறாராம்.
 • 92
Added article 
ரஜினி நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது.  அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.அண்ணாத்த படம் முடிந்த நிலையில் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அடுத்த படத்தை இயக்க தேசிங்கு பெரியசாமி ஒப்பந்தம் ஆக, தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியது.  இதையடுத்து விறுவிறுவென திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார் இயக்குனர். ஆனால் இப்போது படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  அதற்குக் காரணம் படத்தில் இடம்பெறும் ஒரு பிளாஷ்பேக் காட்சியை படமாக்க எக்கச்சக்கமாக செலவாகும் என தயாரிப்பு நிறுவனம் அஞ்சுகிறதாம்.ரஜினி சம்பளத்தோடு படத்தின் பட்ஜெட் எல்லாம் சேர்த்தால் 200 கோடிக்கு மேல் செல்ல அதை திரும்ப எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 • 91
Added a news 
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 98 லட்சத்து 80 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.ஜூலை மாத ஒதுக்கீடாக தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க முடிவு செய்தது. ஆனால் இதுவரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது.இந்தநிலையில் புனேவில் இருந்து வந்த விமானத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 34 பெட்டிகளில் 4 லட்சத்து 8 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மத்திய தொகுப்பில் இருந்து ஜூலை மாத ஒதுக்கீட்டில் 54 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.அதேநேரத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.
 • 154
Added a news 
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,53,18,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 71 லட்சத்து 06 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,40,30,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,840 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 • 157
Added a news 
இன்று (27) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.கொழும்பு, களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 • 159
Added a news 
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று (26) சந்தித்தார்.இதன்போது அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் கட்டுமான பிரிவிலுள்ள தனக்கான உத்தியோகபூர்வ அலுவலகத்தை மீளக் கையளிக்கும் முன்பாக பல்வேறு நியமனங்களை வகித்துள்மை குறிப்பிடத்தக்கது.குறித்த சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் முன்ணுதாரமான சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, ஒய்வின் பின்னராக எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நியமனம் பெறுவதற்கு முன்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி இராணுவம் மற்றும் இலங்கை பீரங்கி படைக்குள் பல முக்கிய நியமனங்களை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அதனை அடுத்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி தளபதியின் வழிகாட்டல்களுக்கும் பாராட்டுக்களுக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பபெற்ற ஊக்குவிப்பு தொடர்பிலும் நினைவு கூர்ந்தார்.
 • 159
GOOD MORNING.......
 • 158