Feed Item
·
Added a post

மாம்பழம் ருசிகரமானது. ஆனால், அதை அதிகமாகச் சாப்பிட்டால் கலோரிகள் கூடும். எனவே, ஒரு நாளுக்கு ஒரு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இடைச்சிறு உணவுகள் குறையும்.

மாம்பழம் இனிப்பானது என்றாலும், அதில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரையை சீராக வெளியிடும். பழமாக சாப்பிடுவதுதான் சிறந்தது, ஜூஸ் வேண்டாம்.

மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குறைந்த கலோரி கொண்டதால், உடலை சோர்வில்லாமல் வைத்து எடையை கட்டுப்படுத்த உதவும்.

உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள், உணவிலிருந்து பழங்களை தவிர்க்க வேண்டாம். பருவத்திற்கு ஏற்ற பழங்களை சீராக சேர்த்துக்கொள்வதே சீரான ஆரோக்கியத்திற்கு வழி.

  • 161