Feed Item

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

ரிஷபம்

தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். தன வருவாயில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத ஆரோக்கியம் சார்ந்த செலவுகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். மனதில் எதிர்கால சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மிதுனம்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பொறுப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கடகம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். துணைவரின் வழியில் மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

கன்னி

நினைத்த பணிகளை முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நவீன யுக்திகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சிரமம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் தொடர்பான இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

தனுசு

குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மகரம்

அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனம் சார்ந்த பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பொன், பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 144