Category:
Created:
Updated:
S
ஹர்பஜன் சிங் தமிழ்சினிமாவில் ஃப்ரெண்ட்ஷிப் இன்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.. இவர் கிரிக்கெட் வீரராக அனைவர் மத்தியிலும் பிரபலமானவர். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா. வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம், குக் வித் கோமாளி பாலா நடிக்கின்றனர்.
தற்போது ஃப்ரெண்ட்ஷிப் படத்தைப் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹர்பஜன்.
அவர் கூறியதாவது, தமிழனின் தாய்மடி # தமிழ்நாடு என்னை அரவணைக்கும் அன்னை மடி என்றும், எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்மர் நம்ம படம் பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியாக உள்ளதால் தல தளபதி படங்கள் போல நீங்கள் கொண்டாடலாம் என்று பதிவிட்டுள்ளார்.