- · 5 friends
-
I

கணவனுக்கு எழுதி வைத்து விட்ட சிறுகுறிப்பு (ஆப்பு?)
மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு (ஆப்பு)குறிப்பு:
*நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.*
திரும்பி வர 10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு daily அவங்ககிட்ட வழிய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு பக்கம் போக வேணாம் ஸிங்க்கு காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு விளக்கேத்துங்க ரெண்டு ஸ்லோகம் சொன்னா நாக்கு வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க ஜிப்பா வேணாம்......ஜிப்பா கலர்ல Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு பார்த்து எடுத்து கவனமா போட்டுட்டுப் போங்க....
---------------------
Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா கொடுத்திருக்கேன் நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க *வேண்டாம்னுட்டு*
--------------------
பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன் அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க. வளத்தவங்கள சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க.. A.M. மா... P.M. மா... Confirm பண்ணிட்டு பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.
-----------------
என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே நாம அட்டண்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி. நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம்
---------------
பத்து நாள் wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்புறம் என் தோழிகள் எல்லாமே Out of station. .
------------------
கட்டக் கடேசியா ஒண்ணு. ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன். சொல்லாம. !!!
-----------------------
*இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்* *என்னா வில்லத்தனம்...!!!!!!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·