-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 10.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். உயர் அதிகாரிகளின் இடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
கடகம்
நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை மறையும். உறவுகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வீடு மாற்றம் குறித்த சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆலோசனை வேண்டும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் சார்ந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். உடல் தோற்றப் பொலிவு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
துலாம்
தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. சிறு சிறு சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மகரம்
சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளின் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மீனம்
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களில் பொறுமை வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·