-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 9.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
நினைத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
சிம்மம்
வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உண்டாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சினம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை குறையும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
உடன்பிறந்தவர்களின் இடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·