- · 5 friends
-
I

சுந்தரர் பிறந்த இடம் திருவாரூரா?
திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார் இசைஞானியார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
சடையநாயனாரின் ஊர் திருநாவலூர்.
இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.சடையநாயனாரின் தந்தைவழி ஊர் திருநாவலூர் ஆகவே சுந்தரரின் பிறந்த ஊர் திருநாவலூர் என்பது வழக்காகிப்போனது.
சுந்தரர் பிறந்த ஊர் திருவாரூராக இருக்கவே வாய்ப்பதிகம். எவ்வாறெனில் ,மணமான மகள் சூலுற்றதும் ஒற்றைப்படை மாதங்களைக் கணக்கில் கொண்டு ஐந்து ஏழு ஒன்பது என ஏதேனும் ஒரு மாதத்தில் சூலுற்ற மகளையும் சூல் தரித்திருக்கும் மகவையும் காக்க வேண்டி காப்பிடும் வளைகாப்பை நிகழ்த்தி தாய்வீடு அழைத்துவருவது தமிழ் தொன்மம் சார்ந்த மரபு.இன்றளவும் பின்பற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இங்கே கவனிக்கத்தக்கது இதுவே மகளின் தலைச்சூல் ஆகும்.இதன்வழி மகப்பேறும் ,மகவீனும் நிகழ்வும் பெண்ணரசியின் தாய்வீட்டோடு தொடர்புடையதாதல் வெளிப்படை.
இசைஞானியாரின் தாய்வீடு திருவாரூர் (ஞானசிவாச்சாரியார்.) இவ்வகையில் தமிழர் தொல்மரபுப்படி இசைஞானியாருக்குத் திருவாரூர் தாய்வீட்டில் தான் சுந்தரரை ஈன்றெடுத்திருக்க வாய்ப்பாம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·