-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 4.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும். உறவுகளின் வழியில் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன், பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
சிம்மம்
திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் அமையும். நினைத்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கவலை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
கன்னி
தோற்றப்பொலிவுகளில் மாற்றம் ஏற்படும். அரசு காரியத்தில் இருந்துவந்த தாமதம் விலகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். மருமகன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் சார்த்த எண்ணங்கள் கைகூடும். இலக்கிய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
தடைப்பட்ட தனவரவுகள் கிடைக்கும். வாகனம் சார்ந்த பயணங்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முதலீடு தொடர்பான செயல்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உடனிருப்பவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் பெருமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
புதுவிதமான கண்ணோட்டங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதிய ஆசைகள் மற்றும் விருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். வேலைக்காரர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வாகனம் தொடர்பான பயணங்களால் மேன்மை உண்டாகும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். சில அனுபவங்களால் தெளிவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·