- · 5 friends
-
I

நாளெல்லாம் மகிழ்ச்சி தரும் அற்புத முத்திரை
ஒரு சிலரை பார்க்கும் பொழுது நீங்கள் கவனித்திருப்பீர்கள் மொத்த முகத்திலும் மகிழ்ச்சி ததும்பி இருக்கும்.
அவர்கள் உள்ளே ஆயிரம் ரணங்கள் இருக்கலாம் ஆனால் வெளி உலகில் அவர்கள் எல்லோரிடமும் அவ்வளவு மகிழ்ச்சியாக அன்பாக கலகலப்பாக பேசுவார்கள்.
இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இவ்வாறு இருக்க அடிப்படையில் எது செயல்படுகிறது என்றால் இயற்கையாகவே அவர்களுக்கு மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கிறது என்பதுதான் உண்மை.
அல்லது அதை ஸ்டிமுலேட் செய்கிறார்கள்
அவர்கள்.
சரி நமக்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் கவலைகள் பிரச்சனைகள் மன உடல் கோளாறுகள் என அத்தனை வைத்திருக்கிறோம் வெளி உலகத்தில் இருக்கும் நண்பர்களை தெரிந்தவர்களை சந்திக்கும் பொழுது உதட்டளவில் புன்னகைக்கிறோம்
அல்லவா
இப்பொழுது விஷயத்திற்கு வருகிறேன் நாம் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தால் வெளியில் நீங்கள் புன்னகைக்காமலேயே பார்க்கும் யாவும் மகிழ்ச்சியானதாகவே அமையும்
நீங்கள் சந்திக்கும் நபரெல்லாம் மகிழ்ச்சிக்குரியவராக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக உங்களை சந்திப்பார்கள் அதுபோன்ற ஒரு சூழல்கள் அவ்வளவு அழகாக ஏற்படும்
இது எப்படி சாத்தியமாகிறது என்றால் இதோ இப்படித்தான்
இந்த டெக்னிக்கிற்கு பெயர் இன்னர் ஹேப்பினஸ் என்பது அதாவது "உள்ளிருந்து மகிழ்ச்சி" என்பது பொருள்.
இதை நீங்கள் ஒரு முத்திரையிலிருந்து ஆரம்பிக்கலாம் சுண்டு விரல் மட்டும் தனியாக இருக்கட்டும் மற்ற மூன்று விரல்கள் கட்டை விரலின் மேல் பாகத்தை தொடட்டும் இரண்டு கைகளாலும் செய்யுங்கள்
இரு தொடைகள் மேல் உள்ளங்கை மேல் நோக்கியவாறு இருக்கும் வண்ணம் வைத்துக் கொண்டு கண்ணை மூடி உங்கள் வசதிக்கு ஏற்றார் போன்று அமருங்கள். மூச்சு சீராக இருக்கட்டும்
ஆனால் முக்கியமாக இன்னொன்று உங்கள் உதடு சற்றே புன்னகைக்கட்டும்...
அதிகபட்சம் 10 நிமிடங்கள் குறைந்தது ஐந்து நிமிடங்கள் இப்போது கண்ணைத் திறந்து நீங்கள் கவனியுங்கள்.
ஒரு செல்போன் சார்ஜ் செய்துவிட்டு அதை பயன்படுத்தும் பொழுது எவ்வளவு அழகாக அது வேலை செய்கிறது அதுபோல நீங்கள் இப்பொழுது சார்ஜ் ஆகியிருப்பீர்கள்.
உங்களை சுற்றி இருக்கும் யாவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் அமையும் நீங்களும் மகிழ்ச்சியோடு அந்த நாளை நகர்த்துவீர்கள் .
நிச்சியம் சாத்தியம் தானா என்கிறீர்களா சாத்தியம் தான்.
சற்றே செல்போனை இப்பொழுது தூர வையுங்கள் மகிழ்ச்சிக்கான முத்திரையை போடுங்கள் இந்த முத்திரைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் என்ன தெரியுமா? "ஹன்சி முத்திரை"...
முத்திரையை போடும் பொழுது உங்கள் கற்பனையில் ஹன்சிகா வந்தால் தவறு ஒன்றும் இல்லை ஏனென்றால் நமக்கு எந்த வடிவிலாவது மகிழ்ச்சி ததும்ப வேண்டும். அவ்வளவே!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·