- · 5 friends
-
I

உண்மையான உறவுகள் யார்? (குட்டிக்கதை)
தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி கறி சமைத்துவிட்டு, தன் மகளிடம் சொன்னார்.
“மகளே நம்முடன் சாப்பிடஎன் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கலாம். எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.
அவருடைய மகளும் சரியென்று தெருவுக்குவந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்துஎங்கள் வீட்டில் எரியும் தீயை அணைக்கஉதவுங்கள்” என்று.
ஒரு சில நிமிடங்களில் மக்கள் சிலர் வெளியே ஓடி வந்தனர். மீதமுள்ளவர்கள் கூக்குரலைக் கேட்காததுபோல் இருந்தனர்.
வந்தவர்களுக்கு நன்றியைக் கூறி, கறி வீருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் நன்றாக சாப்பிட்டனர். அவர்கள் சென்ற பிறகு தன் மகளை பார்த்து கேட்டார்.
"வந்தவர்களை எனக்கு தெரியாது. இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை. என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எங்கே?" என்றார்.
மகள் சொன்னாள். “தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதற்கே அன்றி.. விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள்."
நீங்கள் வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும் உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்க முடியும்?" என்றாள் மகள்.
பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே உண்மையான உறவுகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·