-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 19.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்து ஈடுபடவும். சக வியாபாரிகளால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் உண்டாகும். நினைத்த செயல்கள் முடிவதில் அலைச்சல் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
சமயோசிதமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தகத்தில் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளின் மூலம் வரவுகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். ஆடம்பரம் சார்ந்த செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல் உண்டாகும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கன்னி
உறவுகளின் வழியில் அனுசரித்து செல்லவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் தோன்றும். உற்பத்தி துறைகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
துலாம்
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறு தூரப் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சுப காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தன வரவு குறித்ததான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மகரம்
வழக்கு விஷயங்களில் புரிதல் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். இரவு நேர பணிகளால் ஆதாயம் கிடைக்கும். பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
கும்பம்
கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உயர்வு ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புது விதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மீனம்
தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·