-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 14.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
மேஷம்
தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகம் சார்ந்த பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழ் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதை உருத்திய சில கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
மிதுனம்
புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். அரசுவழி தொடர்பான செயல்களில் பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர்களின் ஆலோசனை நன்மையைத் தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கடகம்
அரசு தொடர்பான விவகாரங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
உடல் ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
கன்னி
உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகம் சார்ந்த நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டத்தில் செல்வாக்கு மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
துலாம்
எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தேக ஆரோக்கியம் தெளிவுப் பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணம் தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
விருச்சிகம்
மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். எதிர்பாராத பொருட்சேர்க்கைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தொல்லை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை சீராகும். புதிய செயல்திட்டங்களில் கவனம் வேண்டும். புதிய வேலை முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகரம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். தருமம் சர்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தொலைதூர சுபச்செய்திகளின் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். காதில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
பழைய நினைவுகள் மூலம் சோர்வு உண்டாகும். நண்பர்களின் வகையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சிரமம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகம் சார்ந்த பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதியத்துறை சார்ந்த அறிமுகம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·