- · 5 friends
-
I

வசந்தத்தை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு
நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. இந்த வருடத்திற்கு விசுவாவசு வருடம் என்று பெயர். பஞ்சாங்கத்தின்படி இந்த தமிழ் வருட பிறப்பை பார்த்தால் மிக மிக நல்ல வருடம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தமிழ் வருடப்பிறப்பில் நமக்கு ஆதாயங்கள் அதிகமாக கிடைக்கும், செல்வ செழிப்பு உயரும், லாபங்கள் உயரும், என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.
இந்த வருட பிறப்பு நமக்கு மங்களத்தை உண்டு பண்ணும் வருடப்பிறப்பு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த வருட பிறப்பானது சுவாதி நட்சத்திரத்தில் பிறக்க இருப்பதால் சிறப்பு வாய்ந்த வருட பிறப்பாக கருதப்படுகிறது. இந்த ஸ்வாதி நட்சத்திரம் நரசிம்மரது நட்சத்திரம். ஆக நாளைய தினம் எல்லோரும் நரசிம்மர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது. சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·