- · 16 friends
-
S
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.அதாவது தொடரான இடப்பெயர்வுகள் உறவுகளின் இழப்புக்கள் மீள்குடியேற்றத்தின் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் என்பன சின்னாபின்னமாகிப்போன அடுத்த தலைமுறைகளான மழலைகளின் எதிர்காலம் குறித்து எழுகின்ற நம்பிக்கையினங்களை களையவேண்டிய பொறுப்பும் கடமையும் எங்கள் எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது.இந்த மழலைகளுக்கான உலகம் மிக அழகானதாக அமையவேண்டும்.அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அரவணைப்புக்கள் சரியாகக் கிடைக்கவேண்டும்.இவ்வாறான உரிமைகள் கிடைக்காத சந்தர்பபத்தில் அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகக் காணப்படும்.
எமது சமுதாயத்தில் அன்றாடம் காணக்;கூடிய விடயங்களில் பெற்றோர் பாதுகாவலர்கள் சிறுவர்களின் அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, வதிவிடம், சுகாதாரம், வளர்ப்பு, கண்காணிப்பு, கல்வி, என்பன இன்றி அவர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாது புறுக்கணிக்கின்றனர். இது அவர்களது எதிர்காலத்தை திசைமாற்றி விடுகின்றன.
கடந்த கால யுத்தத்தினால் இலங்கையில் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக விடுதலைப்போராட்ட வரலாறுகளிலும் அதிகளவில் பாதிப்புக்களை எதிர்கொண்ட சமுகமாக யுத்தகாலங்களில் வாழ்ந்த சிறுவர்களும் பெண்களுமே காணப்பட்டனர்.இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற கடந்த காலப்போரின் காரணமாக அதிகளவான பெண்களும் சிறுவர்களும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் ஏராளமான பெண்களும் சிறுவர்களும் உயிரிழந்தும் அங்கவீனர்களாகவும் காணப்படுகின்றனர்.
ஒரு குழந்தை இவ்வுலகிலேயே பிறக்கும் போது, அக்குழந்தைக்கு சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் இடத்து ஒரு நற்பிரஜையாக வளரும், மாறாக இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுமிடத்து அக்குழந்தையினுடைய எதிர்காலம் வேறு திசையில் சென்றுவிடும்.எங்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற இவ்வுலகானது மழலைகளுக்காக அவர்களுடைய எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவும் அடுத்த தலைமுறையிடம் கையளிக்கவேண்டிய வகையில் உள்ளது,
இன்றைய தெற்காசிய நாடுகளில் காணப்படுகின்ற ஒத்த பிரச்சனைகளில் ஒன்று சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துதல், இதற்கு மிகப்பெரிய காரணம் குடும்ப வறுமையாகும்.இலங்கையில் சிறுவர்கள் வேலைகளில் ஈடுபடுதல், துன்புறுத்தப்படுதல், துஸ்பிரயோகப்பபடுத்தல், போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.மழலைகளின் உடல் உள வளர்ச்சிக்கு அவர்களுடன் தொடர்புடைய சமுகத்தின் பங்கு மிக முக்கியமானது.
ஜேர்மனிய தேசத்தைச்சேர்ந்த சிறுவர் உள ஆய்வாளரான 'பிரெட்றிக் புரோ' அவர்கள் குறிப்பிடுகையில் சிறுவர்களின் உடல் உள வளர்ச்சிக்கு அவர்களது சமுகத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அதாவது, குழந்தைப்பருவவத்தில் அவரது தாயை இழந்த இவருக்கு, அதனால் ஏற்பட்ட தவிர்ப்பும் இழப்பும் கிராமப்புறச்சூழலும் இவரது சிந்தனைக்கு வழிகோலியது.ஆகவே சமுக மயமாக்கலில் இருந்து எதிர்கால சமுகத்தைக் கற்றுக்கொள்ளுதல் ஒத்துப்போகாத நடத்தைகளை தவித்துக்கொள்ளுதல், என்பவற்றில் ஏதோ ஒன்று அல்லது அனைத்தும் சிறுவர்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.சிறுவர்களின் உடஉள ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமாக குடும்ப சூழல் அமைகின்ற போது, அக்குழந்தையினுடைய வளர்ச்சி சிறப்பாக அமைகின்றது,மாறாக, குடும்பச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகள் அக்குழந்தையினுடைய உடல்உள வளச்சியின் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.இந்தப்பாதிப்புக்களது நடத்தைப் பிறவின் மூலம் சிறுவர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தி சமுக குடும்ப மற்றும் தனிப்பட்ட ஒழுக்க நடத்தைகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதைக் காணமுடிகின்றது.சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாததாகக் கருதப்படுகின்ற இச்சூழலில் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டியது அனைவரினது கடமையாகும்.
'நான் ஒரு குழந்தையை அணுகும் போது, அதன் இயல்பு மென்மை உணர்வுகளையும் அதனது எதிரகால வளர்ச்சி மரியாதை உணர்வையும் என்னுள் தோற்றிவிக்கின்றது'என குழந்தையினுடைய மனநிலை பற்றி லூஜிபாஸ்ரர் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.
2003ம் ஆண்டு ஈராக்கில் இடம் பெற்ற யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.கம்போடியாவில் கமரூஜ் ஆட்சிக்காலத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் இளவயது கட்டாயத்திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.1992ம் ஆண்டு போஸ்னியாவிலும் கெஸ்ஸகோவின்னாவிலும் ஐந்து மாதங்கள் நடைபெற்ற போரில் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரையிலான சிறுமிகள் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.கொசோவோவில் முற்பது வரை ஐம்பது சதவீதமான பெண்கள் சிறுபராயத்தினர் சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வலலுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு காலத்திற்குகாலம் சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.எந்தவொரு சமுகதத்திலும் மழலைகள் என்பது பெறுமதிமிக்க சொத்துக்கள் ஆவார், இவர்களே நாளைய தலைவர்கள் ஒரு சமுகத்தின் செயற்பாட்டாளர்கள், இவர்களுக்கு உரிமைகள் உண்டு என்பதை பெரியவர்களாகிய எம்மில் பலர் அறிந்து கொள்வதில்லை.சிறுவர்களை வேலைக்கமத்துததல், சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் உழைப்பு, சிறுவர் விபச்சாரம், வழிதவறிச்செல்லும் சிறுவர்கள் என மூன்றாம் உலக நாடுகளில் தனித்துவமான ஓர் பிரச்சனையாக மாறியுள்ளது.
மறுபுறம் இன்றைய உலக ஓட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பாரிய அபிவிருத்தி நவீன கண்டுபிடிப்புக்கள் மிக வேமாக முன்னேறி வருகின்ற நிலையில் இதற்கு மாறாக சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றது.இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் இடம்பெற்ற இராணுவ முரண்பாடுகள் உள்நாட்டு யுத்தங்கள் அரசியல் சமுகப்பிரச்சனைகளால் சிறுவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அதாவது போதைப்பொருளுக்கு அடிமையாகுதல், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுதல் போன்றன அதிகளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக சிறுவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்களது குடும்பத்தில் அகப்புறத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றது.
மேற்கு ஆபிரிக்க நாடான சியாரா லியோனில் அடிப்படைக்கல்வியினை கட்டாயம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் பெரும்பாலான சிறுவர்களும் சிறுமிகளும் உடலை விற்கும் விபச்சாரத்திற்கு வலிந்து செல்லும் நிலை காணப்படுவதை எங்களின் பலர் அறிந்து கொள்ளவில்லை. பொதுவாக, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் மிகவும் வறுமையான பொருளாதார நிலமைகளைக்கொண்டிருப்பதனாலும் அடிக்கடி ஆபத்தான நோய்களுக்கு இலக்காவதாலும் பொருளாதார நிலைமை என்பது மந்தமாகவே காணப்படுகின்றது.
பெருமளவான குழந்தைகள் சிறுவயதில் தாய் அல்லது தந்தையை இருவரையும் இழந்த நிலையில் இருகின்றனர். இதனால் இவர்களுக்கான உணவு, உடை, கல்வி என்பன கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் அற்றுப்போகின்றது.
இவர்களுக்கு பணம் அத்தியவசியத்தேவையாக இருப்பதனால் பெரும்பாலான சிறுமிகள் தமது பாடசாலைக்கல்வி முடிந்தவுடன், பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.
வளர்முக நாடுகளில் நிலவுகின்ற வறுமை இவ்வாறான சிறார்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடுகின்றது.எனவே மழலைகளின் எதிர்காலத்தை கருதி எங்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற இவ்வுலகில் நல்ல ஒரு சமுகத்தை வளர்சிப்பாதையில் இட்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் எங்கள் கைகளில் தரப்பட்டிருக்கின்றது என்ற தூரநோக்குடன் இந்த மழலைகளுக்கான உலகத்தை பாதுகாக்க வேண்டியது எங்கள் எல்லோரினது கடமையாகும்.
வன்னியிலிருந்து ஒரு மடல்
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·