-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 19.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகான்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
திட்டமிட்ட பணிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. இரக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வித்தியாசமான உணவுகளை தவிர்க்கவும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கலைப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்
குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் இடத்தில் புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கும்பம்
தனவருவாய் தேவைக்கு இருக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் அமையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
மீனம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·