- · 5 friends
-
I

காசி அன்னபூரணியின் கதை
முன்னொரு காலத்தில் காசியில் ஒரு தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவருடைய மனைவியும் மகா பதிவிரதை. கணவர் சொல் மீறாதவர்.
அந்த பக்தர் தினமும் கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு சிவ தியானம் செய்வார். அதே போல் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்திருந்த போது பல மணிநேரம் நிஷ்ட்டை கலையாமல் சமாதி நிலையை அடைந்தார். அவர் மனைவி அவர் நேரத்தில் வராததால் வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டு கவலையுடன் இருந்தாள்.
இது இப்படி இருக்க கயிலாயத்தில் பரமசிவன் பார்வதி தேவியிடம் "தேவி பார்த்தாயா என் பக்தன் என்னை குறித்து நிஷ்டைகலையாமல் தியானம் செய்வதை"என்றார்.
அதற்கு பார்வதி தேவி "போதுமே உங்கள் பக்தனின் பெருமை. அங்கே வீட்டில் அவன் மனைவி மஹா பதிவிரதை இவனை காணோமே எனறு தவியாய் தவித்து கொண்டிருக்கிறாள் அவளுடைய கவலைக்கு என்ன பதில்" என்றாள்.
இதை கேட்டவுடன் பரமசிவன் கயிலாத்திருந்து மறைந்து அந்த பக்தன் வீட்டுக்கு அவன் போலவே உருவமெடுத்து சென்றார்.
பக்தனின் மனைவி சிவபெருமானை தன் கணவன் என்று நினைத்து கால் அலம்ப தண்ணீர் கொடுத்து இலை போட்டு சாப்பிட அழைத்தார்.
சிவபெருமான் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் நேரத்தில், அந்த பெண்மணியின் நிஜ கணவன் வந்து கதவை தட்ட திறந்தவளுக்கு ஒரே குழப்பம் மற்றும் ஆச்சரியம்.
அவள் இருவரையும் மாறி மாறி பார்த்து யார் தன் நிஜமான கணவன் என்று சற்று குழம்பினாள்.
அவள் பதிவிரையாதலால் உடனே சுதாரித்துக் கொண்டு கையில் நீர் எடுத்து "யார் என் கணவர் இல்லையோ அவர் பிச்சைகாரராக போக வேண்டும்" என்று சபித்து விட்டாள். அவள் சபித்த உடனே பரமசிவன் பிச்சைகாரராக உருமாறி காசி வீதியில் பிச்சை எடுக்க புறப்பட்டு விட்டார்.
இது இப்படி இருக்க பார்வதி தேவி அந்த பக்தன் வீட்டில் நுழைந்த சிவபெருமான் என்ன ஆனார் என்று தேடிக்கொண்டு வந்தாள்.
அவர் பக்தனின மனைவியால் பிச்சைக்காரனாக போகும்படி சபிக்கபட்டதை அறிந்து, அவர் பிச்சை எடுக்கும் போது யாராவது போட மறுத்தால் என்ன செய்வது என்று தானே தங்க வட்டிலில் அன்னத்தை வைத்து கொண்டு காசியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சிவபெருமான் கேட்கும்போது போடுவதற்காக தயாராக இன்றளவும் அன்னபூரணியாக நின்று கொண்டிருக்கிறாள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·