- · 16 friends
-
S
வரலாற்றில் இன்று வைகாசி 23
வரலாற்றில் இன்று வைகாசி 23
1911 – நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.
1932 – பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1939 – அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிச் இம்லர் நேச நாடுகளின் கைதியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.
1948 – இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.
1949 – பனிப்போர்: மேற்கு செருமனி என்ற நாடு அமைக்கப்பட்டது.
1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1960 – சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.
1992 – இத்தாலியின் மாஃபியாக்களுக்கு எதிரான நீதிபதி கியோவானி பால்க்கோனி, அவரது மனைவி உட்பட ஐவர் சிசிலியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1993 – எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1995 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
2006 – அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.
2008 – இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2008 – அனைத்துலக நீதிமன்றம் "நடுப் பாறைகள்" என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.
2014 – காங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.
2016 – இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் யெமன், ஏடன் நகரில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில் 45 இராணுவத்தினரும், சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேரும் கொல்லப்பட்டனர், 200 பேர் வரையானோர் காயமடைந்தனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·