- · 0 friends
-
அதிஷ்டமே இல்லாத அணியில் விராட் கோலி இருக்க வேண்டுமா?
விராட் கோலி அணியின் வெற்றிக்காக தனது 200 வீதத்தை வழங்கி வரும் நிலையில் அதற்கான பிரதிபலன்கள் எதுவும் கிடைக்காமையே இவ்வாறான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) படுதோல்வியைச் சந்தித்தது.
அதன்படி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
நேற்றைய போட்டியில் SRHக்கு எதிராக, RCB பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர்.
சன்ரைசஸ் ஹைதராபாத் (SRH) அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் IPLஇல் நான்காவது அதிவேக சதம் அடித்து RCBயை வீழ்த்தினார்.
RCB அணிக்காக தினேஷ் கார்த்திக் 237.14 ஸ்டிரைக் ரேட்டில் 83 ஓட்டங்களை எடுத்தார்,எனினும் RCB 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடரில் பெங்களூரு அணியின் உரிமையாளர்களை மாற்ற வேண்டும் என்று டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி பிசிசிஐக்கு வலியுறுத்தியுள்ளார்.
RCB அணி 2024 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 6 தோல்விகளுக்குப் பிறகு புள்ளிஅட்டவணையின் அடிமட்டத்தில் பின்தங்கியுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை விஜய் மல்லையா அணி உரிமையாளராக பணியாற்றிய பிறகு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் RCB இன் தற்போதைய உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் RCB அணியின் உரிமையை மாற்றுவதன் அவசியம் குறித்து மகேஷ் பூபதி தனது ‘x ' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, SRHக்கு எதிரான நேற்றைய போட்டியில் M சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB அணியின் தோல்வியைக் கண்டு வேதனையடைந்ததாக முன்னாள் இந்திய அணி தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·