-
- · 3 friends

இன்றைய ராசி பலன் – மே 22, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
இன்றைய ராசி பலன் – மே 22, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 8ஆம் திகதி | ||
|
| |
மேஷம் Aries | பொறுமையாக இருக்க வேண்டிய நாள் இன்று. புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
ரிஷபம் Taurus | மேன்மை நிறைந்த நாள் இன்று. மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பண வரவு அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாக இருப்பீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் :6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
மிதுனம் Gemini | விவேகமாக இருக்க வேண்டிய நாள். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
கடகம் Cancer | போட்டிகள் நிறைந்த நாள் இன்று. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்கள் நன்மையை தரும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்..
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
சிம்மம் Leo | சாதனை நிறைந்த நாள் இன்று. உடல் ஆரோக்கியம் பெறும். வாழ்க்கைத் துணையுடன் செல்லும் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். பணவரவு மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் :7 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
கன்னி Virgo | எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இன்று. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கௌரவ பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவு பெறும். வியாபார பணிகளில் சிறு சிறு மாறுதல்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
துலாம் Libra | ஊக்கம் நிறைந்த நாள் இன்று. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
விருச்சிகம் Scorpio | பொறுமையாக இருக்க வேண்டிய நாள் இன்று. எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் சிறு சஞ்சலங்களும், வாக்குவாதங்களும் ஏற்படும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில பொறுமையுடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
தனுசு Sagittarius | மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மகரம் Capricorn | ஆர்வம் நிறைந்த நாள் இன்று. எதிர்பாராத பண வரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
கும்பம் Aquarius | ஆதரவு நிறைந்த நாள் இன்று. புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மீனம் Pisces | பாராட்டுகள் நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கருத்துகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்