·   ·  1346 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சிறந்த தம்பதியர் (குட்டிக்கதை) ** தம்பதிகள் அவசியம் படிக்கவும்**

ஒரு பெரிய அரங்கம் - 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து

ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.

அதில் ஒரு மனைவி

''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று,

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்!

பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்,

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை arranged marriage என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள், திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல, எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்

ஆனால் போட்டியின் நடுவர், இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது,

எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்!

இருவரும் ஆனந்த கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்!

சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல, தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது,

எல்லோரும் திரும்பி பார்க்க காரை சுற்றி சுற்றி வந்தபடி அந்த மனைவி: நானும் எத்தனையோ நாள் தலைபாடா அடிச்சிகிட்டேன் சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு, டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்...

உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தை கண்டேன்...

கணவனும் பின்னாலேயே சுற்றிவர…

எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி பின்னாடியே சுத்தறீங்க ?!

உங்களுக்கு தான் மூட்டுவலி இருக்கு இல்ல.. பேசாம ஒரு இடத்துல உட்காருங்க..

அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்...

எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்...

சீமையில இல்லாத மாப்பிள்ளைய அவன சொல்லனும்... என்றபடி காரை சுற்றி சுற்றி வர…

வேடிக்கை பார்த்த தம்பதிகள் புன்னகையோடு விரல் கோர்த்து நடந்தார்கள்!.

அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான் வேண்டும் என்று யார் சொன்னது?

  • 1528
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய