
கோடிகளை கொட்டியும் சொதப்பும் அனிருத்; சீப் அண்ட் பெஸ்டாக மாஸ் காட்டும் ஜிவி
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இசையும் முக்கிய காரணம். இளையராஜா தொடங்கி அனிருத் வரை இங்கு இசையில் கோலோச்சிய பிரபலங்கள் ஏராளம். குறிப்பாக 90ஸ் வரை இளையராஜாவை மிஞ்ச ஆள் இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் ஏ.ஆர்.ரகுமான் வந்தார். அவரும் சுமார் 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அனிருத் அவர் இடத்தை நிரப்பினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்டார் அனிருத். தற்போது அனிருத்தை மிஞ்சும் அளவுக்கு பிசியான இசையமைப்பாளராக மாறி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
ஜிவி பிரகாஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதற்கு அனிருத்தின் வீழ்ச்சியும் ஒரு காரணம். அனிருத் எந்த பாட்டு போட்டாலும் ஹிட்டாகும் என்கிற நிலை இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அனிருத்தின் இசை ரசிகர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. அவர் இசையில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2, தேவரா, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி என எந்த படமும் பெரியளவில் வெற்றியடையவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கி உள்ளன.
அனிருத்துக்கு மவுசு குறைந்துள்ள அதே வேளையில் ஜிவி பிரகாஷ் குமார் மளமளவென பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அண்மையில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த அமரன், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றன. அப்படங்களின் வெற்றிக்கு இவரின் இசையும் முக்கிய பங்காற்றி இருந்தது. அதுமட்டுமின்றி அனிருத்தை காட்டிலும் சம்பள விஷயத்தில் ஜிவி பிரகாஷ் சீப் அண்ட் பெஸ்டாக திகழ்ந்து வருவதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அனிருத் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஜிவி பிரகாஷ், சம்பளம் 10 கோடிக்கும் குறைவு தான். அதனால் அவரை தயாரிப்பாளர்கள் சூழ்ந்து வருகிறார்கள். தற்போது ஜிவி பிரகாஷ் கைவசம் அஜித்குமாரின் குட் பேட் அக்லி, தனுஷ் இயக்கிய இட்லி கடை, கவினின் மாஸ்க், சிவகார்த்திகேயனின் பராசக்தி, ஜிவி பிரகாஷே ஹீரோவாக நடிக்கும் கிங்ஸ்டன், தெலுங்கில் வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் என அவர் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva