புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் யோகிபாபு
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, கதையின் நாயகனாவும் பல படங்களில் நடித்து வருகிறார். யோகிபாபு சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனல் தன்னிடம் பணம் கேட்டதாக தெரிவித்தார். இதையடுத்து வலைபேச்சு யூடியூபர்கள் யோகிபாபுவை விமர்சித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பேசும்பொருளாக ஆனது.
அதில், ’யோகி பாபு மிகப்பெரிய முருக பக்தர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். யோகி பாபுவிடம் நாங்க காசு வாங்கியிருந்தா அவர் திருத்தணி கோயிலில் வந்து சத்தியம் செய்ய வேண்டும். கோபுரத்தின் மீது ஒரு குப்பை ஒட்டிக் கொண்டது போலத்தான் சினிமாவில் யோகி பாபு உள்ளார். அவரது காமெடி எதுவுமே மக்களை சிரிக்க வைப்பது கிடையாது. அவர் நல்ல காமெடியனோ அல்லது நடிகனோ கிடையாது. அவர் ஒரு குப்பை, சீக்கிரமே கீழே விழுந்து விடுவார்.
ஒரு பிரபல நடிகர் கூட தன்னை ‘dont touch’ என சொன்னதாக யோகி பாபு எங்களிடம் கூறி வருந்தினார். அது வேற யாருமில்லை அஜித் தான்’ எனவும் அந்த வீடியோவில் பேசியிருந்தனர். இதைக் கேட்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர்.
இந்நிலையில் யோகி பாபவும் வலைப் பேச்சு யூடியூபர்கள் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக வேதாளம் படப்பிடிப்பின்போது அஜித், தன்னையும் மொட்டை ராஜேந்திரன் இருவரையும் போட்டோ எடுக்கும் புகைப்படத்தை தன் X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யோகிபாபு அஜித்துடன் வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva