
மறக்க முடியாத நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்
32000 ரூபாய் செலவில் ஒரு திரைப்படம். கதாநாயகனுக்கு சம்பளம் 140 ரூபாய்.
1940 காலகட்டங்களில் திரைப்படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாளெடுத்து சண்டைபோட தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுக¬ள் இருந்தது. இதை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன். உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் கொண்ட இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர்.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜி செகண்ட் ஹீரோ. சிறுவயதிலேயே எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்றவர். வாய்பாட்டும் ஆர்மோனியமும் கற்ற இவர், நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகராக இருந்து, நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, நடிப்புமீது காதல் வந்துவிட்டது.
1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பெனியில் மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். 1938 இல் நந்தகுமார் என்ற திரைப்படத்தில் டி.ஆர். ராமச்சந்திரன், டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார் .அதன் பின் இரண்டு அண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்தார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மன இறுக்கத்தில் இருந்த மக்களுக்கு நகைச்சுவைப் படங்கள் நல்ல மாறுதலாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்கினார். சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனே 1941-ல், வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது.
சபாபதி படத்திற்காக டி,ஆர் ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் 140 ரூபாய். இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். இந்தப் படத்திற்கான மொத்த பட்ஜெட் அன்று 32,000 ரூபாய். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva