![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
"அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" - மன்னிப்பு கேட்டார் சிவகுமார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசி முடித்த நடிகர் சிவகுமாரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் சால்வை ஒன்றை வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட சிவகுமார் அந்த சால்வையை தரையில் வீசி எறிந்தார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்தை கிளப்பிய நிலையில் சிவகுமார் மற்றும் கரீம் (சால்வை கொடுத்த நபர்) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று சிவகுமார் விளையாட்டாக அந்த செயலை செய்ததாக கூறப்பட்டது. இப்படியான நிலையில் நடிகர் சிவகுமார் மற்றும் கரீம் ஆகிய இருவர் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் தனது செயலுக்காக நடிகர் சிவகுமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இந்த வீடியோவில் தனக்கு சால்வை வழங்கிய கரீம் தனது 50 ஆண்டு நண்பர் என்று கூறியுள்ளார். மன்னார்குடியில் ஒரு நாடக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது தான் கரீமை சந்தித்ததாகவும் அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் கரீமுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே நான் தான் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கரீமின் பேரன் பேத்திகளையும் தான் பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சால்வை அணிவிப்பது தனக்கு பிடிக்காத ஒரு நடைமுறை என்றும் அது தெரிந்தும் தனது நண்பர் சால்வையை எடுத்து வந்தது அவருடைய தவறு. அன்றைய நிகழ்ச்சியில் எல்லாரும் பேசி முடித்து கடைசியில் தான் பேசி ஏற்கனவே தான் சோர்வடைந்திருந்ததாகவும் தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் கரீமை சால்வையுடன் பார்த்து கோபத்தில் அந்த சால்வையை வாங்கி வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படி சால்வை வாங்கி வந்தது தவறோ அதே போல் தானும் அப்படி நடந்துகொண்டது தனது தவறு என்று கூறி அதற்காக தான் வருந்துவதாக கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார் சிவகுமார்.
இதுபோல சில நாட்களுக்கு முன்பு செல்பி எடுக்க முயன்ற ரசிகரிடம் சிவகுமார் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva