
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்
1980களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சுமார் 20 வருடங்களாக தமிழ் சீரியல்களில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். தேவையானி நடிப்பில் 2004ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் தொடரின் முக்கிய கேரக்டர்களுள் இவரும் ஒருவர். சன் டிவி தொடர்களில் தொடர்ந்து முகம் காண்பித்து வரும் இவர், கடைசியாக தாலாட்டு தொடரில் நடித்து இருந்தார். பிரபல நடிகை லக்ஷமியின் முன்னாள் கணவர் இவர்.
நடிகர் மோகன் ஷர்மா, தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் ரோட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன் தினம் இரவு, தி.நகரில் இருந்து தனது வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஹாரிங்க்டன் ரோடு 10ஆவது அவென்யூ அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் இவர் காரை வழி மறித்துள்ளனர். அவர்கள், மோகன் ஷர்மா காரை விட்டு இரங்கியவுடன் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் வெறிகொண்டு தாக்கியதால், மோகன் ஷர்மாவிற்கு கண், கால்கள் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுளன. அதன் பிறகு இவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மோகன் ஷர்மா, மூக்கில் கட்டு போட்டிருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் மோகன் ஷர்மா, தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.























