வன்னி

Added a news 
விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக  வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு  அனுமதிகளை கொடுத்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று (08-04-2023) முரசுமோட்டை முருகன் கோவில் முன்றலில் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்நது உரையாற்றுகையில் இன்றைய நாட்டின் ஜனாதிபதி சொல்லுகின்றார் யாரும் விக்கிரகங்களை வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்இவ்வாறு கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே பாரம்பரியமாக வழிபட்டு வந்த விக்கிரகங்களை உடைப்பதற்கான அனுமதிகளை கொடுக்கின்றார் குறிப்பாக குறுந்தூர் மலையிலே நீதிமன்றம் போட்ட கட்டளையை மீறி விகாரை அமைக்கப்படுகின்றது.வெடுக்குநாறி மலையிலே விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன இவ்வாறு தமிழர் வழிபாட்டிடங்களில் விகாரை அமைப்பதற்கு அவர் அனுமதித்துள்ளார்சிங்கள பௌத்த பேரினவாதம் எதைச் செய்தாலும் அவர் மௌனமாக இருப்பார் ஆனால் தமிழர்கள் எதையும் போய் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அது வலுக்கட்டாயம் என்றும் தடுத்து வருகின்றனர்.இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாங்கள் எங்களுக்கான சுயாட்சியை நிறுவுவதற்காக் நீண்ட நெடுங்காலமாக போராடி வருகின்றோம் அதற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலையாக கொடுத்திருக்கின்றோம் பலரை இழந்திருக்கின்றோம் பெறுமதி மதிப்பட முடியாத சொத்துக்களை இழந்திருக்கின்றோம் இதையெல்லாம் கடந்தும் இந்த மண்ணில் எமக்கான விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்று என்று குறிப்பிட்ட அவர்எமது அடையாளங்களை நாங்கள் பேண வேண்டும் என்பது எமக்கு முன்னால் உள்ள வரலாற்று ரீதியான கடமையாகும்.மக்களை ஒரு குழப்பகரமான நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இளைஞர்களிடத்திலே ஒரு புதிய விதமான பிரச்சனை உருவாக்கப்பட்டு இருக்கிறதுஅதாவது இன்று போதைப்பொருள் பாவனை இப்பொழுது போதைப்பொருள் பாவனையினால் பல்வேறுபட்ட வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.குறிப்பாக தாய் தந்தை பிள்ளைகளை கொலை செய்தல் போதைப் பொருள் பாவனைகளால் கலாச்சார சீரழிவு என பல்வேறு விதத்திலே எங்களுடைய இளம் சமூகம் சீரழிக்கப்படுகின்றது.அதைவிட தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது இதை பலர் எதிர்க்கின்றனர் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதேபோல பலரும் எதிர்த்திருக்கின்றார்கள் உலக நாடுகள் பல எதிர்த்திருக்கின்றன இந்த அரசாங்கம் கொண்டுவரப் போகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மிக மோசமானது.ஒன்று கூடுவதோ அல்லது உரிமைகள் பற்றி பேசுவதற்கோ முடியாது எங்களது உரிமைகள் பற்றி பேச முடியாது இவ்வாறு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்து மக்களை ஒரு நெருக்கடி நிலைக்குள் தள்ளி கொடுங்கோல் ஆட்சி மேற்கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாக தெரிவு இன்று (08-04-2023) பிற்பகல் 4.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிர்வாகத் தெரிவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் நந்தகுமார் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 560
பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி
  • 491
Added a news 
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்ட முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றான பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய் வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று பகல் 1-30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் ஆ.சுந்தரமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை அதிபரும் முன்னை நாள் பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான செபமாலை அல்பிறட் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி த.யோனானந்;தராஜா போட்டியில் துணுக்காய் வலயக் கல்வித் திணைக்களத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் சிறிவள்ளி மற்றும் நட்டாங்கண்டல் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.
+5
  • 647
Added a news 
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 29-03-2023 பாராம்பரிய முறைப்படி பிரம்பு வழங்கும் வைபவத்தை தொடர்ந்து  மாட்டு வண்டில்களில் பண்டமெடுத்து வருவதற்காக யாழ்; புத்தூர் பண்டமரவடிக்கு புறப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர் வரும் 05ம் திகதி புதன்கிழமை இரவு சிறப்பாக நடைபெற உள்ளது.ஆலயத்திற்கான பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று புதன் கிழமை (29-03-2023) பகல் கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரம்பு வழங்கும் நிகழ்வையடுத்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் யாழ்; மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியிலிருந்து பண்டமெடுப்பதற்கு மாட்டு வண்டிகளில் பக்தர்கள் இன்றைய தினம் புறப்பட்டுள்ளனர்.
+6
  • 722
Added a news 
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் உறுதியளித்துள்ளார்.கடந்த 2023.03.22 ஆம் திகதி, புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்,அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களை அமைச்சு அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டமானது, கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிறைவில் பளை பிரதேசத்தின் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் இத் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் முடியும்.கடற்கரையை அண்டிய ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாக உள்ள பச்சிலைப்பள்ளியின் பெரும்பாலான கிராமங்களின் நிலத்தடி நீர் உவர் நீராகவே காணப்படுகிறது. இதனால் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கான தீர்வாகவே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பளையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியை கிளிநொச்சி நீர்த்தாங்கியுடன் இணைப்பதற்கான நீர்குழாய்கள் இன்மையால் இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றதை அடுத்து, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவருக்கு உடனடியாகவே உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், இத்திட்டத்தை விரைவாக நிறைவுசெய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
  • 607