·   ·  249 news
  •  ·  0 friends

கனடாவில் பாடசாலை பேருந்து மோதி ஒருவர் பலி

 கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • 29
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.