Feed Item
·
Added article

பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். டாப்ஸியின் இந்தச் சொத்து, 'ரெடி டு மூவ் இன்' குடியிருப்புத் திட்டமான இம்பீரியல் ஹைட்ஸில் உள்ளது. சொத்து ஆவணங்களின்படி, டாப்ஸி வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் கார்பெட் பரப்பளவு 1390 சதுர அடியாகும், அதே நேரத்தில் பில்ட்-அப் பரப்பளவு 1669 சதுர அடியாகக் கூறப்படுகிறது. மேலும் இரண்டு கார்களுக்கான பார்க்கிங் இடமும் கிடைத்துள்ளது.

அறிக்கைகளின்படி, டாப்ஸி பன்னு மற்றும் அவரது சகோதரி சகுன் பன்னு ரூ.4.33 கோடி செலுத்தி புதிய அடுக்குமாடி குடியிருப்பபை வாங்கி உள்ளனர். இந்தச் சொத்தின் பதிவு மே 15ந் தேதி நடைபெற்றது. நடிகையும் அவரது சகோதரியும் இந்த சொத்து பதிவுக்காக ரூ.21.65 லட்சம் பத்திர செலவு மட்டும் செய்துள்ளனர். மேலும், ரூ.30,000 பதிவுக் கட்டணமாகவும் அவர்கள் செலுத்தியுள்ளனர்.

  • 153