ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ் குழுவின் சார்பில் பங்கேற்ற அஜித், தனது பந்தயக் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அவரது காரின் டயர் வெடித்தது.
இந்த சம்பவம் நிகழ்ந்ததும் கார் சிலநேரம் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அஜித் உடனடியாக வாகனத்தை ஓட்டுபாதையில் நிறுத்தியதால் பெரிய சேதமோ, உயிர் அபாயமோ ஏற்படவில்லை. இதில் அஜித்துக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தியாகும்.
விபத்துக்குப் பிறகு, கார் டிராக் பகுதியில் டயர் மாற்றப்பட்டு, அஜித் மீண்டும் பந்தயத்தில் பங்கேற்றார். அவரது தைரியம் மற்றும் கார் ஓட்டத்தில் உள்ள நம்பிக்கை, ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
பந்தயத்திற்கான அவரது ஆர்வமும், அதற்காக அவர் எடுத்திருக்கும் பயிற்சியும் இதை நிரூபிக்கின்றன. நடிகராக மட்டுமல்லாமல், வித்தியாசமான துறைகளிலும் அஜித் தனது தடம் பதிக்கிறார்.
- 147