- · 5 friends
-
I

மகான் ரமணர் வாழ்வில்....
சிதம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த நடேச ஐயருக்கு ஆஸ்ரமத்தில் சமையல்காரராக வேலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்ரமத்தில் இருந்தவரையில் மஹரிஷியை விட்டு விலகாமல் இருந்தார்
இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டு துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று நடேச ஐயர் தெளிந்த போது தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்து திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகவானின் நிழலில் இருந்தார். சமையலறையில் அவர் வேலையைத் துவங்கிய போது அங்கே பிராமண விதவைகள் பலர் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களால் மிகவும் சிரமமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். ”ஒரு எஜமானியம்மாவிடமிருந்து ஓடி வந்து ஐந்து எஜமானிகளிடம் மாட்டிக்கொண்டேன்” என்று ஒரு முறை ஐயர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
சமையலறையில் அவர்களின் தலையீட்டால் எழுந்த மன அழுத்தத்தில் ஆஸ்ரமத்தில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து ஓடிவிட முடிவு செய்தார். வீட்டிற்குத் திரும்பும் போது திருவண்ணாமலையிலிருந்து 40 மைல்களில் இருக்கும் விழுப்புரம் வந்தடைந்தார். அங்கே குளித்து முடித்த அவர் நெற்றியில் விபூதியைத் தரித்துக்கொண்ட போது பகவானை நினைத்துக்கொண்டு ஜபம் செய்தார். அப்போது பகவானே அவரது எதிரில் வந்து நிற்பதுபோல உணர்ந்தார்.
“நீங்க எப்படி இங்கே வந்தீங்க?” என்று ஆச்சரியத்துடன் ஐயர் கேட்கிறார்.
பகவான் சிரித்துக்கொண்டே.....
“என்கிட்டேயிருந்து எவ்ளோ தூரம் போயிட்டே?” என்று கேட்கிறார்.
கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய பதிலளிக்க முடியாமல் திணறுகிறார் ஐயர்.
எதிரில் நிற்கும் பகவானின் உருவம் திருவண்ணாமலையை நோக்கி நடக்கத் துவங்குகிறது. தயக்கமே இல்லாமல் ஐயர் பின் தொடர்கிறார். முன்னால் சென்ற உருவம் மறைந்தாலும் தனக்கு முன்னால் பகவான் சென்றுகொண்டிருக்கிறார் என்று அப்படியே நடந்து ஆஸ்ரமத்தை அடைகிறார் ஐயர். ஹாலுக்குள் நுழைந்து பகவான் முன்னால் தொப்பென்று விழுந்து நமஸ்கரிக்கிறார்.
“என்கிட்டேயிருந்து எவ்ளோ தூரம் போயிட்டே?” என்று விழுப்புரத்தில் கேட்ட அதே கேள்வியை பகவான் மறுபடியும் வாய்விட்டுக் கேட்கிறார்.
நிலைகுலைந்து போன ஐயர் குலுங்கிக் குலுங்கி அழுதார். சமையலறைக்குள் சென்று மீண்டும் தனது வேலைகளில் வழக்கம் போல ஈடுபட்டார்.
எல்லோரும் ஆஸ்ரமத்தில் தரிசிக்கும் இந்த தேகம் மட்டும் பகவான் இல்லை என்பதை இந்த நிகழ்ச்சி ஐயருக்குப் போதித்தது. அவரும் அதை புரிந்துகொண்டார்.
"நாம் மனதில் கிரகித்துக்கொள்வது போல பகவான் யாரோ அல்லது ஏதோ ஒன்றோ கிடையாது. அவரைப்பற்றி நாம் உண்மையாக எதுவும் சொல்ல முடியாது என்ற அறியாமையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நான் பகவானைப் பற்றி எதுவுமே சொல்லமாட்டேன். ஏனென்றால் உண்மையான பகவானை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனிப்பை எப்படி ருசித்தால் மட்டுமே உணர முடியுமோ அது போலவே பகவானை அறிந்துகொள்ளுதல்”
“அறுவை சிகிச்சை நடந்த அந்த நேரத்தில் இந்த உடம்பானது நாம் உடுத்திக்கொள்ளும் ஒரு சாதாரண சட்டை போலத்தான் என்பதைப் போன்றே அவரது நடவடிக்கைகள் இருந்தது. சதை அறுக்கப்பட்டு இரத்தம் வழிகிறது. ரேடியம் ஊசிகள் அந்த கான்சர் சதையைச் சுற்றி சொறுகப்படுகிறது. பகவான் முழு பிரக்ஞையோடு இருக்கிறார். அவரது கையில் செய்யப்படும் அந்த அறுவை சிகிச்சை செய்முறைகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. பகவானின் அந்த காஷ்ட மௌனத்தைக் கண்டு நாங்கள் வாயடைத்துப் போயிருந்தோம். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள். அறுவை சிகிச்சை நிறைவடைந்தவுடன் மருத்துவர்கள் தன்னிச்சையாக அவரது காலில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அந்த மருத்துவர்கள் குழுவிலிருந்து ஒருவர் பேசினார்.
“நான் இதுவரை நிறைய பேருக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு அனுபவம் எனக்கு வாய்த்ததில்லை”
அப்போது அந்த அறை முழுக்க ஒருவிதமான சாந்தி பரவியிருந்தது. அப்படிப்பட்ட அமைதியை நான் எங்கும் உணர்ந்ததில்லை. அது எப்படிப்பட்டது என்பதை என்னால் விளக்கமுடியவில்லை. ஆனால் இதுவரை நான் அனுபவித்திராத ஒரு அனுபவமாக அது இருந்தது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·