Category:
Created:
Updated:
I
விடியாகாலைல ஓடினா..
இதயத்துக்கு நல்லதுனு சொன்னாங்க..
அதால.. 4.00 மணிக்கு எல்லாம் அலாரம் வச்சி.. எழுந்து கெளம்பி ஓட ஆரம்பிச்சேன்.. 2 கிலோ மீட்டர் ஒடனதும் நல்லா மேல்மூச்சி.. கீழ்மூச்சி வாங்க ஆரம்பிச்சிருச்சி..
அப்ப எதுத்தாப்ல ஒரு பெரியவரு நல்லா ஃபாஸ்ட்டா ஓடி வந்துகிட்டு இருந்தாரு..
எனக்கு அவர பாத்து ஆச்சரியமாய் நிறுத்தி என்ன பெரியவரே இவ்வளவு வேகமா ஓடுறீங்க மூச்சு எறக்கலையா.. னு கேட்டேன்..
அதுக்கு..
அந்த மனுசன்..
முதல்ல எல்லாம் ஓடும் போது உங்கள மாதிரி தான் மூச்சு எறைக்கும் தம்பி..
மூச்சு எறைச்சு.. அட்டாக் வந்து நான் செத்து போனதுக்கு அப்புறம் இப்ப ஓடும் போது மூச்சு எறைக்கிறது இல்ல..
அன்னைக்கு U டர்ன் போட்டு ஊட்டுக்கு வந்து கவுந்து படுத்தது தான்..
இப்பல்லாம் 7 மணிக்கு முன்னால எழுந்திரிக்கிறதே இல்ல