- · 5 friends
-
I

நாய்க்குட்டிக்கு கொடுத்த சிகிச்சை (குட்டிக்கதை)
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஓர் உயர் இன நாய் இருந்தது. சொல்ல ஆரம்பித்தார்....
"என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது. என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது.....
நான் மிகவும் நல்ல உணவளித்து நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிக்கவில்லை
நான் அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.. நான் அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சிய போக்கை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
டாக்டர் நாயை கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம் ஆராய்ந்துவிட்டு சொன்னார்...
இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதை கவனிப்பதன் மூலம் சிகிச்சை செய்வேன். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்......
மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து...அதை எருமை மாடுகளுடன் கட்டி, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் மட்டும் கொடுத்து, தோல் பெல்ட்டால் அடிக்கச் சொன்னார்.
மருத்துவரின் உதவியாளர் இரவு முழுவதும், டாக்டர் சொன்னபடியே சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.
மறுநாள் அந்த பெண்மணி வந்து கேட்டார்.
"ஐயா என் நாய்க்குட்டி எப்படி இருக்கு ?
டாக்டர் சொன்னார்__
உங்கள் நாய்க்குட்டி நீங்கள் இல்லாத குறையை உணர்ந்து விட்டது என்று நம்புகிறேன் ......
டாக்டரின் உதவியாளர் நாயை அழைத்து வந்தார்.
நாய் அறைக்குள் வந்தவுடன்.. துள்ளிக் குதித்து மேடத்தின் மடியில் அமர்ந்து, வாலை அசைத்து, மேடத்தின் முகம், வாயை நக்க ஆரம்பித்தது.!! அவருக்கு மிகுந்த சந்தோஷம்.
மேடம் சொல்ல ஆரம்பித்தார்: திடீர்னு இந்த மாதிரி பாசக்காரனா மாறிட்டானே ? என்ன பண்ணீங்க சார்?
டாக்டர் கூறியதாவது: பெரிய ஏர் கண்டிஷனர் அறையில், தினமும் மிகவும் சுவையான உணவை சாப்பிட்டுவிட்டு, தன்னையே மாஸ்டர் என நினைத்து, தன் உரிமையாளரை மறந்து விட்டது.
அதற்கு புரியும்படி உளவியல் மற்றும் உடல் சிகிச்சை தேவைப்பட்டது. கொடுத்தோம்,----- இப்போது அது ஒழுங்காக உள்ளது என்றார்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·