-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 9.4.2025
மேஷம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். செயல்திறனில் தாமதம் ஏற்படும். பெற்றோர் வகையில் ஒத்துழைப்புகள் உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
ரிஷபம்
செயலில் இருந்துவந்த தடைகள் விலகும். உடல்நிலையில் கவனம் வேண்டும். முயற்சியில் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவும், புதிய பாதையும் புலப்படும். நண்பர்கள் ஆதரவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். இனம் புரியாத தேடல்களால் குழப்பம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலைத்துறைகளில் மேன்மை கிடைக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். புதுவிதமான ஆடை சேர்க்கை உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தர்மம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
ஆடம்பரம் சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
சுரங்கம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதுமையான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கவின்கலைகள் மீதான ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
விருச்சிகம்
சமூகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். நிம்மதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
தனுசு
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். செயல்களில் ஆதாயம் கிடைக்கும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். வருவாய் செயல்களில் கவனம் வேண்டும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்
மீனம்
தாய்மாமன் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர்பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·