- · 5 friends
-
I

ஐந்து அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம்
கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "மேலச்சிதம்பரம்" என்று அழைக்கப்படும் பேரூர்_பட்டீஸ்வரர்_ஆலயம்.
இங்கு "நடராஜ பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.
இங்கு ஐந்து அதிசயங்கள் இன்றும் தொடர்கிறது.
🌹இறவாத பனை"
🌹பிறவாத புளி,"
🌹புழுக்காத சாணம்,"
🌹எலும்பு கல்லாவது,"
🌹வலதுகாது மேல்நோக்கிய நிலையில் மரணிப்பது." இதுதான் அந்த ஐந்து அதிசயங்கள்....!!"
🌹இறவாத பனை...!!
பல ஆண்டுகாலமாக என்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் இன்றும்
நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்.
பிறவாத புளி..
இங்குள்ள புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம். விதைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் முயற்சி செய்தும் முடியவில்லை.
புழுக்காத_சாணம்..
இந்த ஆலயம் அமைந்துள்ள "பேரூர்"
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின்"சாணம் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்....
எலும்புகள் கல்லாவது...!!
"மனித எலும்புகள்" கல்லாவது. இந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறந்த மனித உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை இங்குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்கள். ஆற்றில் விடப்படுகிற"எலும்புகள்" சிறிது காலத்திற்குள்"கற்களாக உருமாறி" கண்டெடுக்கப்படுகிறதாம்.
ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்தபடி மரணமடையும் அதிசயத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் பிறவா வரமளிக்கும் "பட்டீஸ்வரர்"....
நற்றுணையாவது அண்ணாமலையாரே
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·