- · 5 friends
-
I

மகனுக்காக மருத்துவப் பணியை விட்ட தந்தை
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் டி குகேஷ் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். 14 சுற்றுகளின் முடிவில் சீனாவின் டிங் லிரனை 7.5 - 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் குகேஷ் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலமாக விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பின் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்கு அவரின் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். ஏனென்றால் 7 வயதில் பொழுதுபோக்காக தொடங்கிய செஸ் விளையாட்டை, குகேஷ் தீவிரமாக எடுத்துக் கொண்டு வெற்றிகளை குவிக்க தொடங்கினார். உலகின் 3வது இளம் வயது கிராண்ட் மாஸ்டராக குகேஷ் உயர்ந்த பின், அவரின் குடும்பத்தினர் மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர்.
குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டு அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். இவர் குகேஷ் வெளிநாடுகளுக்கு போட்டிக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பதால், 2017ஆம் ஆண்டிலேயே தனது பணியை கைவிட்டுள்ளார். மருத்துவப் பணியில் இருந்து விலகிய பின் குகேஷ்-க்கு தேவையான விஷயங்களை செய்வது மட்டுமே அவரின் பணியாக இருந்துள்ளது.
அதேபோல் செஸ் போட்டிக்கு தயாராகும் போது அதிகமாக பேசும் பழக்கம் இல்லாதவர் குகேஷ். தனது கவனம் வேறு பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தந்தையுடன் கூட பேசாமல் அமைதியாக இருப்பார். வெற்றிக்கு பின் மட்டும் தந்தையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவர், நண்பர்களுடன் தான் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார் என்று ரஜினிகாந்த் சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு வெளியில் வந்த தமிழக வீரர் குகேஷ், நேரடியாக தனது தந்தை ரஜினிகாந்தை கட்டிப்பிடித்து கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது ரசிகர்கள் "குகேஷ்.. குகேஷ்" என்று ரசிகர்கள் ஆரவாரம் எழுப்ப, அவரின் தந்தையுடன் நெகிழ்ச்சியுடன் மகனை கட்டியணைத்து கொண்டாடினார்.
மேலும், 12 ஆண்டுகளுக்கு முன் குகேஷ், மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று தனது ஆசையை கூறியிருந்தார். அந்த கனவை குகேஷ் அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·