-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 12.3.2025
மேஷம்
எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். நண்பர்கள் மூலம் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். விவசாயம் சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிதானமான செயல்பாடுகள் எதிர்ப்புகளை குறைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில்நுட்பக் கருவிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கடகம்
பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உதவிகளால் அலைச்சல்கள் நேரிடலாம். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். சிறு தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் கனிவுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
புதிய வேலைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். எதிலும் தற்பெருமை இன்றி செயல்பட்டால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் நிமித்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
துலாம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் இலாபம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சிந்தனைத் திறன் மேம்படும். குடும்பத்தினருடன் பயணங்கள் சென்று வருவீர்கள். நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் விவாதங்கள் தோன்றி மறையும். தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பழைய பிரச்சனைகள் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில ஆதரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
மகரம்
தனவரவில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
பொருளாதார ரீதியான சிக்கல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகள் முடியும். நெருக்கமானவர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·