வடகொரியாவை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் இதோ :-
- வடகொரியாவில் பாலியல் படங்களைப் பார்ப்பது, தென்கொரிய படங்களை பார்ப்பது, பைபிள் வாசிப்பது குற்றமாக கருதப்படும்; அப்படி செய்தால் அவர்களை அந்நாட்டு அரசு தூக்கிலிட்டு விடுவார்கள்.
- வடகொரியாவில் கஞ்சா செடி வளர்ப்பது சட்டப்படி செல்லும் தெரு ஓரங்களில் கூட இந்த செடி வளர்ந்து இருக்குமாம். போதை மற்றும் மருத்துவத்திற்காக இந்த செடியை அந்நாட்டு அரசு பயன்படுத்துகிறது.
- வடகொரியாவில் அரசை எதிர்த்து பேசினால் அவர்களை சிறையில் விடுவது மட்டுமல்லாமல் மூன்று தலைமுறையினரையும் சிறைவாசம் அனுபவிக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிடும்.வடகொரிய ராணுவத்தில் பணி புரிய வேண்டுமென்றால் 28 வகையான ஹேர்ஸ்டைல் இருந்தாலே போதுமானது.
- வடகொரியாவில் சாமானிய மக்கள் கார்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.வட கொரியாவின் கிம் -ஜோங்- இல் பிறந்தநாளை அந்நாட்டு மக்கள் புத்தாண்டாக அனுசரிக்கிறார்கள்.
- வடகொரியாவில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் ஆனால் அங்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.உலக அளவில் வடகொரிய ராணுவம் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.வட கொரிய அதிபர் கிம் ஜாங் இல் அவரின் உடல் பதப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
- வடகொரியாவில் காண்டம் தடை செய்யப்பட்டிருக்கின்றது இதனால் தென்கொரிய மக்கள் ஒரு பேராஷூட் முழுவதும் வடகொரிய மக்களுக்கு இதனை பரிசாக அளித்துள்ளனர்.
- மைக்ரோசாப்ட் போன்று வடகொரியாவில் ரெட் ஸ்டார் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகின்றது.