- · 5 friends
-
I

கவிஞர் கா மு ஷெரிப்
பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்.
கவிஞர் கா மு ஷெரிப்.
கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.
அவர் குறித்து ஒரு செய்தி..
“இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான்.
பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார்.
"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
" வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?
"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்த கருவை காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார்.
அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·