- · 5 friends
-
I

எம்.ஜி.ஆர். வெறும் நடிகர் மட்டுமல்ல.....
முதல்ல சஸ்பென்ஸை உடைச்சுட்டு, எம்ஜிஆரோட தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பலாம்! இல்லேன்னா தம்பி பொன்னுவேல் ரொம்ப கோவிச்சுக்குவாரு!
எம்ஜிஆரின் முகவாட்டத்தை அறிந்த எம்.எஸ்.வி ஒரு தீர்வு சொன்னார்! அது, எம்ஜிஆர், மக்களிடம் ஓட்டுக்கேட்கும் பிரச்சாரத்தையும், அத்தோடு ஐந்து பாடல்களையும் இணைத்து அப்போதுதான் வந்திருந்த L. Pரிக்கார்டுகளா தயார் பண்ணி, எல்லா கிளைக்கழகங்களுக்கும் அனுப்பிச்சிடலாம் என்பதே அவர் ஐடியா!
எம்ஜிஆர் அசந்து போனார்! விஸ்வநாதனுக்கு இசையைத்தவிர வேறெதுவும் தெரியாது என்பதே எம்ஜிஆர் எண்ணமாக இருந்தது!
அப்போதுதான் பெரிய சைஸ் அரக்கு ரிக்கார்டுகள் முடிவுக்கு வந்து, சிறிய சைஸ் சின்தெடிக் ரிக்கார்டுகளும், சாவி கொடுக்க தேவையில்லாத நவீன கிராமபோன் பெட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தது! அதனால் குரல், இசையெல்லாம் துல்லியமாக, இனிமையாக மக்களை சென்றடைந்தது! இதுவும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அனுகூலம்!
சத்யா ஸ்டுடியோ ரிக்கார்ட் தியேட்டரில் "என் தாய்மார்களே "எனத்துவங்கும் எம்ஜிஆர் பேசும் பேச்சும், இரட்டை இலை வெற்றி இலை என TMS பாட்டும், அதோடு சுசீலா, வாணிஜெயராம் குரல்களில் நான்கு பாடல்களுமாக இரண்டே நாளில் ரிக்கார்ட் ஆனது!
எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன் பாடல்களை எழுதினர்! இதற்கான தொகையை எம்ஜிஆர் தந்த போது கண்ணீர் சிந்த எம்.எஸ்.வி "என்னையும் உங்களையும் பிரித்துப்பார்த்து விட்டீர்களே அண்ணா" என்று உறுதியாக வாங்க மறுத்து விட்டார்! கவிஞர்கள் தொட்டு, பாடகர்கள், இசை அமைப்பாளர் என்று யாரும் ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை!
கிளைக்கு ஒரு ரிக்கார்ட் இலவசமாக தர வந்த போது நான் உள்பட பெரும்பான்மை கிளைச்செயலாளர்கள் வாங்க மறுத்து, நான்கைந்து ரெக்கார்டுகளை கடையில் பணம் தந்து வாங்கிக்கொண்டோம்!
இன்றளவும் அண்ணா திமுக மேடைகளில் அந்தப்பாடல்களும், எம்ஜிஆரின் உரையும் தேர்தல் காலங்களில் ஒலிப்பரப்பப்பட்டே வருகிறது!
மூன்று மாதத்துக்கு முன் எம்.பி தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடங்களாக இல்லாமல், புதிய பாதைகளில் புதிய இடங்களில் எம்ஜிஆர் பயணம் அமைவதாக பார்த்துக்கொள்ளப்பட்டது!
அப்படித்தான் அயோத்தியாப்பட்டிணம் --பேளூர் மார்க்கமாக படையாச்சியூர், ஏத்தாப்பூர் வழியாக ஆத்தூர் போவதாக பயணத்திட்டம் வகுக்கப்பட்டது! இன்றைக்கு 23,18 அடி அகலத்தில் நவீன எந்திரங்களை வைத்து சற்று குதிப்பது கூட இல்லாமல், நெகுநெகு என்று இருக்கும் அந்த சாலை அன்றைக்கு மாட்டு வண்டியில் கூடப்பயணிக்க தகுதியற்ற, பத்தடி அகலமுள்ள குண்டும் குழியுமான சாலை!
இன்றைக்கு தலைவர்கள் வந்தால் நான்குவழிச்சாலையில் கூட எங்காவது ஒன்றாக இருக்கும் வேகத்தடைகளை முழுக்க அப்புறப்படுத்தி விடுகிறார்கள்! இத்தனைக்கும் நவீன ஏர்பலூன் வைத்த இம்போர்டெட் வண்டிகள்! பெரிய குழிகளில் விட்டால் கூட ஜெர்க் ஆகாது!
அவர் குளிர் வசதியில்லாத தூக்கி தூக்கி போடும் ஸ்டான்டேர்ட் வேனைத்தான் பயன்படுத்தினார்! ஒரு மர ஸ்டூல் அசையாமல் போல்ட்டுகள் போட்டு இருக்கும்! மூன்று பேர் நிற்கும் அளவு மேல் மூடி திறந்து, அதில் அவர், வேட்பாளர், பாதுகாவலர் இரண்டு பேர் என நெருக்கிப்பிடித்து நிற்பார்கள்! கட்சியினர் வண்டிக்குள் ஏழெட்டு பேர் இருப்பார்கள்!
அவ்வளவுதான் அந்த காலத்தில், அந்த வண்டியில் அதிகப்பட்ச வசதி!
குண்டும் குழியும் சாலையில், தூக்கித்தூக்கிப்போடும் வண்டியில், மூச்சு விடக்கூட காற்றின்றி, நெருக்கிக்கொண்டு, நேரத்துக்கு நேரம் சோறு தூக்கமின்றி எம்ஜிஆர் தமிழகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களை, சிரித்த முகத்தோடு சந்தித்தார்!
காத்திருப்பதில் மக்கள் பட்ட துன்பத்தை விட, பயணப்பட்டு எம்ஜிஆர் அடையும் வேதனை அதிகமாகத்தான் இருந்தது! இருந்தும் பெரும்பாலும் பயணத்தை ரத்து செய்ய மாட்டார்! ஓய்வுக்கு ஒதுக்கிய நாளையும் பிரச்சாரத்துக்கே பயணப்படுத்துவார்! அவ்வளவு துன்பங்களும் மக்களைப்பார்த்தால் பஞ்சு பஞ்சாக பறந்து போய் முன்னிலும் உற்சாகமாவார்!
மக்களின் அன்பு மழையில் நனைந்து விட்டு, வண்டியில் பயணிக்கும் போது கட்சியினரிடம் "இந்த மக்களின் அன்புக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன்" என கண்கலங்குவார்!
எம்ஜிஆரின் வெற்றி, ஏதோ சுகவாசிக்கு கிடைத்த குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி அல்ல! இருபதாண்டுகளுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் ஒன்றிப்பழகி. அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த, ஒரு கடின உழைப்பாளியின் வெற்றி!!
இந்த தொடரை எந்த ஆராய்ச்சி மாணவராவது படித்துக்கொண்டிருந்தால் என் பணிவான வேண்டுகோள்!
1958யில் நாடோடிமன்னன் வெளியானதிலிருந்து, 1987ல் அவர் மரணிக்கும் வரையிலான அவரது தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்களை நெடிய ஆராய்ச்சி செய்து, டாக்டரேட் பெறுங்கள்! வெறும் நடிகன் என்பதால்தான் வெற்றி எனும் அறிவிலிகளின் வாய் அடைபடட்டும்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·